Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட்டில் இந்தியா 148 ரன்னில் சுருண்டது!

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 5வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 148 ரன்களுக்கு சுருண்டது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டோணி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்ட் டிரா ஆனது. லண்டன் லார்ட்சில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னிலை

முன்னிலை

சவுதம்டன் டெஸ்டில் 266 ரன்கள் வித்தியாசத்திலும், மான்செஸ்டர் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 54 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. இதன் மூலம் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

5வது டெஸ்ட்

5வது டெஸ்ட்

இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்திய அணியில், ஜடேஜாவுக்கு பதிலாக ஸுடுவார்ட் பின்னி சேர்க்கப்பட்டார்.

டாஸ் வென்ற இங்கிலாந்து

டாஸ் வென்ற இங்கிலாந்து

அதேபோல் பங்கஜ் சிங்கிற்கு பதிலாக இஷாந்த் சர்மா இடம் பெற்றார். இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் குக் தனது அணி முதலில் பந்து வீசும் என்றார்.

அடுத்தடுத்து அவுட்

அடுத்தடுத்து அவுட்

இதைதொடர்ந்து இந்திய அணி முதலில் பேட் செய்தது. இந்த போட்டியிலும் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ளாமல் இந்திய வீரர்கள் வரிசையாக நடையை கட்டினார்.

மூவர்தான் ஓகே

மூவர்தான் ஓகே

இதில் இந்திய அணி 148 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் கேப்டன் டோணி 82 ரன்களும், முரளி விஜய் 18 ரன்களும், அஷ்வின் 13 ரன்களும் எடுத்தனர்.

ஒற்றை இலக்கத்தில் அவுட்

ஒற்றை இலக்கத்தில் அவுட்

இங்கிலாந்து வீரர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் இதர இந்திய வீரர்கள் ஒற்றை இலக்கங்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இங்கிலாந்து வீரர்கள் வோக்ஸ் 3, ஜோர்டன் 3, ஆன்டர்சன் 2, ப்ராட் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

Story first published: Saturday, August 16, 2014, 10:35 [IST]
Other articles published on Aug 16, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+