மன்கட் முறை... அஸ்வின் போட்டோவை சுக்கு நூறாக கிழித்த ஆண்டர்சன்... சர்ச்சையான வீடியோ
Recommended Video

லண்டன்:ஜாஸ் பட்லரை மன்கட் முறையில் அவுட்டாக்கிய அஸ்வின் போட்டோவை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், கிழித்தெறிந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் 2008ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது.
லீக் போட்டிகள் அனைத்தும் ரசிகர்களை கட்டி போட்டு வைத்திருக்கிறது. அதிலும், ஜெய்பூர் போட்டியை அவ்வளவு எளிதாக யாரும் மறந்துவிட முடியாது. அந்தளவுக்கு சர்ச்சையானது அந்த போட்டி.

மன்கட் அவுட்
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் அஸ்வின், பட்லரை மன்கட் முறையில் அவுட்டாக்கி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினார். ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகினரும் விளையாட்டு உணர்வு இல்லாமல் செயல்பட்டதாக திட்டி தீர்த்தது.
ரசிகர்கள் கோபம்
அதனை முன்வைத்து பல இங்கிலாந்து வீரர்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினர். தற்போது அந்த பட்டியலில் புதியதாக இணைந்துள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

ஆண்டர்சன் ஆத்திரம்
இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், அஸ்வினை வித்தியாசமான முறையில் பழி தீர்த்து, தமது ஆத்திரத்தை தணித்துள்ளார்.

போட்டோ கிழிப்பு
அதானவது அஸ்வினின் போட்டோவை சுக்கு நுறாக கிழித்தெறிந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. அஸ்வின் விஷயத்தில் எப்படி எதிர்மறையான கருத்துகள் இருந்ததோ... அதேபோன்று ஆண்டர்சன் விவகாரத்திலும் இருக்கிறது.


Click it and Unblock the Notifications