Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வேலை செய்யாத கேப்டன்.. பென் ஸ்டோக்ஸ் படைத்த வித்தியாசமான சாதனை.. சிஎஸ்கே-லயும் இப்படிதான் இருந்தாரு!

லண்டன்: அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ் படைத்துள்ள வித்தியாசமான சாதனையை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

லார்ட்ஸ் மைதானத்தில் அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இதில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 172 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதையடுத்து பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி போப் அடித்த இரட்டை சதத்தால் 524 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

பின்னர் ஆடிய அயர்லாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 362 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 11 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதன்பின்னர் இங்கிலாந்து அணியின் வெற்றி எளிமையாக அமைந்தது. இங்கிலாந்து அணி கிராலே 4 பந்துகளில் 3 பவுண்டரிகள் விளாசி வெற்றியடைந்தார்.

England Captain Ben Stokes becomes the first Test captain in history to win a Test match without batting, bowling or wicket keeping

இதன் மூலம் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக பொறுப்பேற்ற 13 போட்டிகளில் இங்கிலாந்து அணி 11வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் - பயிற்சியாளர் மெக்கல்லம் கூட்டணியை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்தப் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங், பவுலிங் என்று எதனையுமே செய்யவில்லை.

கேப்டன்சி மற்றும் ஃபீல்டிங் மட்டுமே செய்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பேட்டிங், ஃபீல்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் என்று எதையுமே செய்யாமல் வெற்றிபெற்ற முதல் கேப்டன் என்ற வித்தியாசமான சாதனையை பென் ஸ்டோக்ஸ் படைத்துள்ளார். இதனை கிரிக்கெட் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். ஏனென்றால் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ரூ.16.25 கோடி கொடுத்து பென் ஸ்டோக்ஸ் ஏலத்தில் வாங்கப்பட்டார்.

இருப்பினும் 2 போட்டிகளில் மட்டும் விளையாடிய அவர், காயத்தால் ஓய்விலேயே இருந்தார். மே மாதம் முதல் வாரத்தில் காயத்தில் இருந்து மீண்ட அவர், வேறு எந்த போட்டியிலும் சிஎஸ்கே அணிக்காக களமிறங்கவில்லை. இதன்பின்னர் பிளே ஆப் சுற்றுக்கு முன்பாக இங்கிலாந்துக்கும் திரும்பினார். இதனால் பென் ஸ்டோக்ஸ் புது மாப்பிள்ளை போல் ஜாலியாக ஐபிஎல் தொடரில் எந்த வேலையையும் செய்யாமல் இருந்ததாக ரசிகர்கள் கிண்டல் செய்து வந்தனர்.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியிலும் பென் ஸ்டோக்ஸ் அதேபோல் இருப்பதை ரசிகர்கள் ஜாலியாக கிண்டல் செய்து வருகின்றனர். அதேபோல் முக்கியமான தருணங்களில் இங்கிலாந்து அணியின் மாபெரும் வீரராக அமைந்துள்ள பென் ஸ்டோக்ஸ்-க்கு ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Story first published: Sunday, June 4, 2023, 11:37 [IST]
Other articles published on Jun 4, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+