Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னா மாதிரி ஃபீல்ட் செட்.. நீதான்யா கேப்டன்.. ரோகித் செய்யாததை செய்து அசத்திய பென் ஸ்டோக்ஸ்!

பர்மிங்ஹாம்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் ஒரு ஃபீல்ட் செட் அமைத்து விக்கெட்டுகளை வீழ்த்தியது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கேப்டன்சி, பவுலர்களை பயன்படுத்திய விதம் மற்றும் ஃபீல்ட் செட் என்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா செய்ய தவறியதை, பென் ஸ்டோக்ஸ் களத்தில் செய்து வருகிறார்.

England Captain Ben Stokes fielding setup is the Main reason for the Australia top order failure

ஸ்டீவ் ஸ்மித்திற்கு இடதுபக்க திசையில் ஒரேயொரு ஃபீல்டர் வைத்து அட்டாக் செய்ததை தவிர்த்து வேறு எந்த திட்டத்தையும் ரோகித் சர்மா உருவாகவில்லை. இதுவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடிக்க முக்கிய காரணமாக அமைந்தது. ஆனால் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கிய உடனே ஒட்டுமொத்த ஃபீல்டிங்கையும் மாற்றியமைத்தார். குறிப்பாக ஸ்டீவ் ஸ்மித் ஸ்கொயர் லெக் திசையில் அதிக முறை ஆட்டமிழந்திருக்கிறார்.

இதனை புரிந்துகொண்டு ஸ்லிப் திசையில் 4 ஃபீல்டர்களையும், லெக் ஸ்லிப் திசையில் 2 ஃபீல்டர்களையும், ஸ்கொயர் லெக் திசையில் ஒரு ஃபீல்டரையும் நிறுத்தி அட்டாக் செய்தார். இதன் மூலம் ரன்கள் சேர்க்க முடியாமல் திணறிய ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். அதேபோல் டேவிட் வார்னர் விக்கெட்டை பிராட் வீழ்த்துவதற்கு பென் ஸ்டோக்ஸ் அமைத்த ஃபீல்ட் செட்டும் இன்னொரு காரணம்.

ஏனென்றால் டேவிட் வார்னர் அதிக ரன்கள் சேர்க்கக் கூடிய பகுதியான ஷார்ட் கவர் பாய்ண்ட் திசையில் ஃபீல்டரை நிறுத்தி பென் ஸ்டோக்ஸ் ரன்களை கட்டுப்படுத்தினார். இதனால் பதற்றமடைந்த டேவிட் வார்னர், பிராட் பந்தில் பவுண்டரி அடிக்க முயன்று போல்டாகி வெளியேறினார். அதேபோல் கேமரூன் க்ரீனுக்கு ஒரே ஸ்லிப் மட்டும் வைத்து அட்டாக் செய்த ஃபீல்ட் செட் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அதுமட்டுமல்லாமல் இடதுகை பேட்ஸ்மேன்கள் களத்தில் இருக்கும் போது மொயின் அலியை கொண்டு வந்து அட்டாக் செய்து தைரியமாக விக்கெட் வீழ்த்தி பென் ஸ்டோக்ஸ் காரணமாக இருந்திருக்கிறார். சரியாக சொல்ல வேண்டுமென்றால் ஆஸ்திரேலிய அணியின் ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கு பிரத்யேக திட்டத்துடன் பென் ஸ்டோக்ஸ் களமிறங்கி, களத்தில் ஆச்சரியங்களை நிகழ்த்தி வருகிறார். கட்டாந்தரையில் கூட மொயின் அலியை வைத்து இரு விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பது இந்திய ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Story first published: Saturday, June 17, 2023, 22:58 [IST]
Other articles published on Jun 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+