Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓவர்களை தாமதமாக வீசியதாக இங்கிலாந்து, நியூசிலாந்தின் புள்ளிகள் குறைப்பு.. ICC மீது ஸ்டோக்ஸ் காட்டம்

மும்பை : இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் தாமதமாக ஓவர்களை வீசியதாக கூறி ஐசிசி இரு அணிகளின் புள்ளிகளையும் குறைத்து இருக்கிறது. அது மட்டுமில்லாமல் இரு அணி வீரர்களின் ஊதியத்திலிருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை முற்றிலும் இழந்துவிட்டது. இந்த நிலையில் ஐசிசி யின் இந்த முடிவுக்கு இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

eng vs nz ben stokes wtc points table

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பென் ஸ்டோக்ஸ், போட்டி 10 மணி நேரத்திற்கு முன்பே முடிந்து விட்டது. இருப்பினும் அபராதம் விதிக்கப்பட்டதை ரொம்ப நல்லது ஐசிசி என்று அவர் பதிவிட்டு இருக்கிறார். இந்த சைக்கிளில் மட்டும் இங்கிலாந்து அணிக்கு 22 புள்ளிகள் குறைக்கப்பட்டிருக்கிறது.

இந்த தொடரில் மட்டும் 19 புள்ளிகளை இங்கிலாந்து இழந்தது. இது குறித்து ஏற்கனவே கருத்து வெளியிட்டிருந்த ஸ்டோக்ஸ், ஐசிசி இந்த விதி குழப்பமாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். இரு அணிகளும் புதிய முதல் டெஸ்ட் போட்டியில் குறிப்பிட்ட நேரத்தை விட மூன்று ஓவர்கள் குறைவாக இங்கிலாந்தும், நியூசிலாந்தும் வீசி இருக்கிறது.

எனினும் போட்டி நான்காவது நாளே முடிந்துவிட்டது. ஒரு நாள் எஞ்சி இருக்கும் நிலையில் போட்டி முடிவடைந்த நிலையில் எதற்காக தாமதமாக ஓவர்கள் வீசி இருக்கிறார்கள் என்று கூறி ஐசிசி இதுபோல் ஏன் நடவடிக்கை எடுக்கிறது என்று கேள்வி எழுந்துள்ளது.

ஐசிசியின் இந்த விதி முட்டாள்தனமாக இருப்பதாக கிரிக்கெட்டின் ஒரு தரப்பு ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது இதுபோல் ஒரு சம்பவம் நாளை இந்தியாவுக்கோ இல்லை ஆஸ்திரேலியாவுக்கோ நடந்தால் அவர்களின் பைனல் கனவே பறிபோய்விடும் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் ஐந்து நாட்களுக்கு முன்பே போட்டி முடிவடைந்து விட்டால் ஸ்லோ ஓவர்ரேட் என்ற முறையை ஐசிசி பார்க்க கூடாது என்றும் ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா முதலிடத்திலும்,தென் ஆப்பிரிக்கா இரண்டாவது இடத்திலும் ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும் இலங்கை நான்காவது இடத்திலும் உள்ளது.

Story first published: Wednesday, December 4, 2024, 12:33 [IST]
Other articles published on Dec 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+