Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லா ரெக்கார்டையும் முறியடிப்பாரு... வெயிட் அண்ட் சீ... நாசர் ஹூசைன் பாராட்டு

லண்டன் : இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முந்தைய இங்கிலாந்து வீரர்களின் அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹூசைன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஸ்பின் பந்துகளை எதிர்கொண்டு விளையாடுவதில் ஜோ ரூட் சிறப்பாக திகழ்வதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஸ்பின் பந்துகளுக்கான களமாக விளங்கும் சென்னை சேப்பாக்கத்தில் முதல் இன்னிங்சில் ஜோ ரூட் 218 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.

முதல் போட்டியில் அபாரம்

முதல் போட்டியில் அபாரம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் முதல் இன்னிங்சில் கேப்டன் ஜோ ரூட் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 218 ரன்களை குவித்தார். மேலும் 227 ரன்களுக்கு தனது அணி வெற்றி பெறவும் காரணமாக அமைந்தார்.

ரூட் முறியடிப்பார்

ரூட் முறியடிப்பார்

இந்நிலையில் ஜோ ரூட் தொடர்ந்து சிறப்பாக விளையாடி முன்னாள் இங்கிலாந்து வீரர் சர் அலாஸ்டர் குக்கின் 161 டெஸ்ட் போட்டிகள் சாதனை மற்றும் ரன்களின் சாதனையை விரைவில் முறியடிப்பார் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹூசைன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ரூட் கண்டிப்பாக இடம்பெறுவார்

ரூட் கண்டிப்பாக இடம்பெறுவார்

ஸ்கை ஸ்போர்ட்சிஸ் பக்கத்திற்காக எழுதியுள்ள நாசர் ஹூசைன் இங்கிலாந்தின் டெஸ்ட் ஜாம்பவான்கள் குறித்து நாம் பேசினால் அதில் குக், கிரஹாம் கூச் மற்றும் கெவின் பீட்டர்சன்னுடன் ஜோ ரூட்டின் பெயரும் கண்டிப்பாக இடம்பெறும் என்றும் கூறியுள்ளார்.

சிறப்பான ஜோ ரூட்

சிறப்பான ஜோ ரூட்

ஸ்பின் பந்துகளை எதிர்கொள்வதில் மிகவும் சிறப்பான வீரராக ரூட் விளங்குவதை அவருடைய ஆட்டத்தில் பார்க்க முடிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் சிறப்பான வெற்றி, விராட் கோலியின் வருகை உள்ளிட்ட காரணங்களால் இந்த தொடரில் இந்தியா 4க்கு 0 என்ற கணக்கில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை ரூட் முறியடித்துள்ளதையும் பெருமையுடன் சுட்டிக் காட்டியுள்ளார்.

Story first published: Wednesday, February 10, 2021, 18:17 [IST]
Other articles published on Feb 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+