Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜாஸ் பட்லரின் திமிர் பேச்சு.. அடுத்த வருசம் வரை காத்திருங்கள்.. இந்திய ரசிகர்களை சீண்டிய பட்லர்

அடிலெய்ட் : டி20 உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்திடம் இந்திய அணி இப்படி சரணடையும் என்று ரசிகர்கள் யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

169 ரன்கள் என்ற இலக்கை ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்திய அணியை வீழ்த்தியது எப்படி என்பது குறித்து இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் அளித்துள்ள பேட்டியை தற்போது காணலாம்.

ஹர்திக் செயல்

ஹர்திக் செயல்

அரை இறுதி போட்டியின் போது ஹர்திக் பாண்டியா மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்களை ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினார். அப்போதே நாங்கள் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறோம் என்று எங்களுக்கு தெரிந்தது. பார்வையாளர்கள் அதிகமாக இருந்தால் நெருக்கடி ஏற்படும் என்பது பழைய கதை.

ஐபிஎல் அனுபவம்

ஐபிஎல் அனுபவம்

ஏனென்றால் ஐபிஎல் போட்டியில் விளையாடி இது போன்ற அனுபவத்தை நாங்கள் ஏற்கனவே கற்றுக் கொண்டோம். இதனால் இது போன்ற சூழ்நிலைகள் உங்களுக்கு எவ்வித பதற்றத்தையும் கொடுக்காது. இந்தியாவில் நாங்கள் நிறைய போட்டிகள் விளையாடி இருக்கிறோம். நாம் பேட்டிங் செய்யும்போது ரசிகர்கள் தங்களது சொந்த அணிக்கு எப்படி ஆதரவு தருவார்கள். அது நமது பேட்டிங்கை எந்த அளவுக்கு பாதிக்கும் என்று தெரியும்.

பாராட்டு

பாராட்டு

ஆனால் ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கிடைத்ததால், இனிமேல் அது போன்ற யுக்திகள் எங்களிடம் பலிக்காது. தொடக்க வீரர் அலெக்ஸ் சிறப்பாக விளையாடியதற்கு காரணம் அவர் பிக் பேஷ் கிரிக்கெட்டில் விளையாடினார். அரையிறுதியில் அவருடைய ஆட்டம் பிரமிக்கும் வகையில் இருந்தது. square திசையில் அவர் நன்றாக ரன் குவிக்கிறார். நேற்று மைதானத்தின் அந்த பகுதி சிறிய அளவில் இருந்ததால் அது எங்களுக்கு சாதகமாக அமைந்தது.

இறுதிப் போட்டி

இறுதிப் போட்டி

கடந்த மூன்று போட்டிகளில் அலெக்ஸ் ஹெல்சின் ஆட்டம் எங்களுக்கு பாசிட்டிவாக அமைந்தது. அவர் ஒரு முனையில் அதிரடியாக ஆடியதால் என்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்த எனக்கு நல்ல வாய்ப்பாக மறுமுனையில் அமைந்தது. அனைவரும் இந்தியா பாகிஸ்தான் தான் இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும் என எதிர்பார்த்தனர். ஆனால் நாங்கள் இறுதி போட்டிக்கு செல்ல வேண்டும் என நினைத்தோம்.

திமிர் பேச்சு

திமிர் பேச்சு

எனவே இந்தியர்களின் பார்டியை நாங்கள் குலைக்க வேண்டும் என்று எண்ணினோம். லீக் சுற்றில் இந்தியா பாகிஸ்தான் மோதிய ஆட்டத்தை பார்த்து பலரும் இறுதிப்போட்டியில் இரு அணிகளும் விளையாட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது அடுத்த உலக கோப்பை வரை காத்திருங்கள். பட்லரின் இந்த திமிர் பேச்சு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Story first published: Friday, November 11, 2022, 14:06 [IST]
Other articles published on Nov 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+