For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 உலககோப்பையை வென்ற போது பட்லர் செய்த காரியம்.. பாகிஸ்தான் ரசிகர்கள் பாராட்டு.. என்ன நடந்தது?

மெல்போர்ன் : டி20 உலக கோப்பையை வென்ற போது ஜாஸ் பட்லர் செய்த காரியம் அங்கிருந்த பாகிஸ்தான் ரசிகர்களை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெல்போனில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

இதனை அடுத்து மைதானத்தில் வீரர்கள் ஓடி வந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

வெற்றி கொண்டாட்டம்

வெற்றி கொண்டாட்டம்

ஜாஸ் பட்லர் மனைவி குழந்தைகள் மைதானத்திற்குள் வந்து அவரைக் கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு உலகக் கோப்பை தொடரிலும் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி விதவிதமான கொண்டாட்டத்தில் ஈடுபடும். 2012 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 உலக கோப்பை வென்ற போது வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கங்கம் ஸ்டைல் நடனம் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

ஒரே குடும்பம்

ஒரே குடும்பம்

2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை இந்தியா வென்றபோதும் விராட் கோலி வித்தியாசமாக நடனம் ஆடினார் . 2021 டி20 உலக கோப்பையை ஆஸ்திரேலியா அணி வென்ற போது ஷூ வில் மதுவை ஊற்றி அதை அருந்தி கொண்டாடினர். இந்த நிலையில் நேற்று உலகக் கோப்பையை வென்றவுடன் இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் தங்கள் கையை ஒன்றாக சேர்த்துக்கொண்டு ஓடி வந்து குதித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஜாஸ் பட்லரின் செயல்

ஜாஸ் பட்லரின் செயல்

நாங்கள் ஒரே அணி ஒரே குடும்பம் என்பதை விவரிக்கும் வகையில் இந்த கொண்டாட்டம் அமைந்தது. இந்த நிலையில் கோப்பையை வென்ற ஜாஸ் பட்லர் தனது அணி வீரர்களுடன் உற்சாகமாக போஸ் கொடுத்தார் .அப்போது மொயின் அலி, ஆதில் ரசித் ஆகியோர் அருகில் இருந்தனர்.எப்போதும் வெற்றி பெற்ற அணிகளுக்கு மது பாட்டில் வழங்கப்படும்.அதனை பீய்ச்சி வெற்றியை வீரர்கள் கொண்டாடுவது வழக்கம் .

ரசிகர்கள் நெகிழ்ச்சி

ரசிகர்கள் நெகிழ்ச்சி

இந்த நிலையில் இஸ்லாத்தில் மதுபானம் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். இதனால் ஜாஸ் பட்லர், ஆதில் ரசித்தையும் , மொயின் அலியையும் கொஞ்சம் நகர்ந்துக்க சொல்லி அறிவுறுத்தினார். இதனை அடுத்து அவர்கள் இருவரும் அங்கிருந்து ஓடி விட்டனர். இதன்பிறகு தான் ஜாஸ் பட்லர் தன்னிடம் இருந்த மதுபாட்டிலிருந்து மதுவை பீய்ச்சி வெற்றியை கொண்டாடினார்.ஜாஸ்பட்லரின் இந்த செயல் ரசிகர்களை நிகழ்ச்சி அடைய வைத்தது.

Story first published: Monday, November 14, 2022, 17:39 [IST]
Other articles published on Nov 14, 2022
English summary
England captain Jos buttler Gesture on winning celebration appreciated by fans டி20 உலககோப்பையை வென்ற போது பட்லர் செய்த காரியம்..
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+