Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாங்க உலககோப்பையை வென்றதே இப்படி தான்.. பாகிஸ்தானை வீழ்த்தியது எப்படி? - இங்கிலாந்து கேப்டன் பட்லர்

மெல்போர்ன் : டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 137 ரன்கள் என்ற இலக்கில் இங்கிலாந்து அணி சுருட்டியது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி,
19 ஓவர் முடிவில் வெற்றி இலக்கை எட்டி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இதன் மூலம் 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் டி20 உலக கோப்பையை ஒரே நேரத்தில் வென்ற அணி என்ற சாதனையை இங்கிலாந்து படைத்தது .

பலனை அனுபவிக்கிறோம்

பலனை அனுபவிக்கிறோம்

இது குறித்து பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர், நாங்கள் செய்த சாதனையில் இது முக்கியமானதாக நான் கருதுகிறேன். தற்போது டி20 உலக கோப்பையை வென்றது மிகவும் பெருமையாக இருக்கிறது. எங்கள் அணி வீரர்களின் நினைத்து சந்தோஷப்படுகிறேன். இது நீண்ட பயணமாக அமைந்தது. நாங்கள் பல மாற்றத்தை செய்தோம் அதற்கான பலனை இப்போது அனுபவிக்கிறோம்.

பாகிஸ்தான் பயணம்

பாகிஸ்தான் பயணம்

இது சிறந்த தொடராக எங்களுக்கு அமைந்தது. உலகக்கோப்பை தொடருக்கு முன்பு நாங்கள் பாகிஸ்தானுக்கு சென்றோம். அங்கு எங்கள் அணி வீரர்களுக்கு நல்ல பயிற்சி கிடைத்தது. ஒரு அணியாக நாங்கள் நல்ல பொழுதை அங்கு செலவிட்டோம். அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியதற்கு பிறகு, நாங்கள் மீண்டு வந்தது எங்களுடைய குணத்தை உங்களுக்கு காட்டி இருக்கும்.

மகிழ்ச்சி அளித்தது

மகிழ்ச்சி அளித்தது

அனைத்து போட்டிகளிலும் வெல்ல வேண்டும் என்ற நிலை இருந்தபோது நாங்கள் விளையாடிய விதம் மகிழ்ச்சி அளித்தது. எங்களுடைய பயிற்சியாளர் எங்களுக்கு முழு சுதந்திரத்தை கொடுத்தார். எங்கள் அணியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் இருப்பதால் இங்கு எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து எங்களுக்கு கற்றுத் தந்தனர்.

பாராட்டு

பாராட்டு

ஆதில் ரசித் இறுதிப் போட்டியில் சிறப்பாக பந்து வீசினார். கடந்த மூன்று போட்டிகளாக அவர் தான் எங்களுக்கு வெற்றியை தேடி தந்தார்.ஆட்டத்தில் நமக்கு சாதகமான விஷயத்தை செய்யக்கூடிய பந்துவீச்சாளராக ஆதில் ரஷீத் இருந்தார். நீங்கள் சரியான லென்த்தில் பந்து வீசினால், உங்களால் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். எங்கள் அணி வீரர்கள் நல்ல வேகத்தில் பந்து வீசினார்கள். அதனை எதிர்கொள்வது பேட்ஸ்மேன்களுக்கு சுலபமாக இருக்காது.

வென்றது எப்படி?

வென்றது எப்படி?

நாங்கள் போட்டியின் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினோம். இதனால் எங்களுக்கு இறுதியில் நெருக்கடி ஏற்படவில்லை. எங்களுடைய பந்துவீச்சாளர்களும் பேட்டிங் செய்வார்கள் என்பதால் சிக்கல் இல்லை. பென் ஸ்டோக்ஸ் எங்களுக்கு வெற்றியை தேடி தரும் வீரராக இருக்கிறார். அவர் கடும் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறுபவர். அவருடைய அனுபவம் எங்களுக்கு வெற்றியை தேடி கொடுத்தது. மொயின் அலியும் , பென்ஸ்டோக்ஸும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டத்தை பாகிஸ்தானிடம் கவர்ந்து சென்று விட்டனர் என்று பட்லர் கூறினார்.

Story first published: Sunday, November 13, 2022, 19:26 [IST]
Other articles published on Nov 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+