Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜோ ரூட் தலை மீது தொங்கும் கத்தி..!! இங்கிலாந்து வீரர்களை அவமானப்படுத்திய பயிற்சியாளர்

மெல்போர்ன்: பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2க்கு0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இன்னும் ஒரு போட்டியில் இங்கிலாந்து தோற்றால் கூட ஆஷஸ் கோப்பையை இங்கிலாந்து இழக்க நேரிடும்.

ஆஷஸ் கோப்பையை இழப்பது என்பது இங்கிலாந்துக்கும் சரி, ஆஸ்திரேலிய அணிக்கும் சரி பெரும் மானப் பிரச்சினை

கொத்தாக ஆட்டமிழப்பு

கொத்தாக ஆட்டமிழப்பு

இங்கிலாந்து அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது அவர்களது மோசமான பேட்டிங் தான். 70 ரன்களுக்கு 8 விக்கெட்,, 80 ரன்களுக்கு 8 விக்கெட் என்று கொத்து கொத்தாக ஆட்டமிழப்பதால் இங்கிலாந்து அணியின் தோல்வி தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.

ஏமாற்றும் பந்துவீச்சாளர்கள்

ஏமாற்றும் பந்துவீச்சாளர்கள்

இங்கிலாந்து பந்துவீச்சாளர்களும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நெருக்கடி தர தவறுகின்றனர். இங்கிலாந்து வீரர்கள் பந்தை ஃபுல் லெங்தில் வீசி ஸ்விங் செய்வதற்கு பதில், ஷாட் லெங்தில் வீசி ஆஸ்திரேலிய வீரர்களிடம் வாங்கி கொள்கின்றனர். எப்போதும் கைக்கொடுக்கும் ஆண்டர்சன், பிராடும் இங்கிலாந்து ரசிகர்களை ஏமாற்றி வருகின்றனர். இந்த ஆண்டில் பிராடை விட ஜோ ரூட் அதிக விக்கெட் எடுத்துள்ளார் என்றால் பார்த்து கொள்ளுங்கள்

பயிற்சியாளர் நடவடிக்கை

பயிற்சியாளர் நடவடிக்கை

இந்த நிலையில், இங்கிலாந்து வீரர்களை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் சராமாரியாக திட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இங்கிலாந்து வீரர்கள் ஒவ்வொருவரும் ஆட்டமிழந்ததை அவர்களை அழைத்து பிக் பாஸ் போல் வீடியோ போட்டு எவ்வளவு மோசமாக ஆடி ஆட்டமிழந்துள்ளாய் பார் என்று சரமாரியாக பேசியுள்ளார்.

வருத்தத்தில் வீரர்கள்

வருத்தத்தில் வீரர்கள்

பயிற்சியாளர் சில்வர்வுட்டின் இந்த பேச்சு , வீரர்களின் மனதை காயப்படுத்தியுள்ளதாக தெரிகிறது. மேலும் கேப்டனாக ஜோ ரூட் நடப்பாண்டில் சொதப்பி வருவதாகவும், அணி வீரர்களின் ஒத்துழைப்பு அவருக்கு கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அணியில் மாற்றம்

அணியில் மாற்றம்

இதனால் அவரது கேப்டன் பதவிக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் பல அதிரடி மாற்றங்களை கொண்ட வர அணி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. ஜானி பாரிஸ்டோ மற்றும் லாரன்ஸ் ஆகியோருக்கு இங்கிலாந்து அணியில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, December 24, 2021, 22:31 [IST]
Other articles published on Dec 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+