Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோஹ்லியை மடக்கும் ரகசியம்….. இங்கிலாந்து கோச் கூறுவதை கேளுங்கள்

பிர்மிங்க்ஹாம்: இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ட்ரெவர் பேலிஸ், கோஹ்லியை எப்படி அழுத்தத்தில் வைத்திருப்பது என்பதை பற்றி பேசியிருக்கிறார்.

மற்ற வீரர்களின் மீது அழுத்தம் கொடுத்து அவர்களை தடுமாறச் செய்தால், விராட் கோஹ்லிக்கு அழுத்தம் அதிகரிக்கும் என தெரிவித்தார்.

england coach reveals his plans to control virat kohli


ட்ரெவர் பேலிஸ் பேசுகையில், “விராட் கோஹ்லி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்கிற இடத்துக்கு மிக அருகில் இருக்கிறார். முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்க்ஸில் அவர் ஆடிய விதம் உலகத்தரம் வாய்ந்த ஒரு விஷயம். இந்திய அணியின் மற்ற வீரர்களுக்கு அழுத்தம் கொடுத்தால், அது கோஹ்லி மீது அழுத்தத்தை அதிகரிக்கும்” என தெரிவித்தார்.

“இது ஒன்றும் வித்தியசமானதல்ல. எங்கள் அணியில் கூட சிலர் தேவையற்று இருந்து, ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ போன்ற வீரர்களுக்கு அதிக அழுத்தத்தை கொடுக்கிறார்கள்” என கூறினார்.

மேலும், அடுத்த போட்டிக்கான ஆயத்தங்களை பற்றி கூறுகையில், இந்திய அணி தான் செய்த தவறுகளை விரைவாக புரிந்து கொண்டு, திசை மாறி நகரும் பந்தை எப்படி எதிர்கொள்வது என கற்றுக்கொள்வார்கள். அதே போல, நாங்கள் சுழல் பந்துகளை எப்படி எதிர்கொள்ளலாம் என பயிற்சி செய்வோம் என கூறினார்.

அதே போல, அஸ்வின் இடது கை ஆட்டக்காரர்களுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசி விக்கெட்களை எடுப்பதை பற்றி கூறினார். அப்போது, இடது கை வீரர்களுக்கு எதிராக அஸ்வின் நன்றாக பந்து வீசுவார் என்பதற்காக நாங்கள் வலது கை வீரர்களை மட்டும் வைத்து இரண்டாவது அணியை தயார் செய்ய முடியாது என கூறினார். அதை எப்படி ஆடுவது என்பது குறித்து நாங்கள் விவாதித்து முடிவுக்கு வருவோம் என தெரிவித்தார்.

பென் ஸ்டோக்ஸ் நீதிமன்ற வழக்கு விசாரணைக்காக செல்ல இருப்பதால், கிறிஸ் வோக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அது குறித்து பேசிய ட்ரெவர், கிறிஸ் வோக்ஸ் 14 ஓவர்கள் பயிற்சியில் பந்து வீசினார். அவர் உடற்தகுதி அடிப்படையிலும் அவர் நன்றாகவே இருக்கிறார், என தெரிவித்தார்.
Story first published: Tuesday, August 7, 2018, 10:12 [IST]
Other articles published on Aug 7, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+