
பெரிய மாற்றம்
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தான் கூடுதல் முக்கியத்துவம் தருவார்கள். இதனால், இங்கிலாந்து அணி, ஒருநாள் கிரிக்கெட்டில் பெரும் இழப்பை சந்தித்தது. இதே ஆஸ்திரேலியாவில் 2015ஆம் ஆண்டு டி20 உலககோப்பையில் இங்கிலாந்து அணி, வங்கதேசத்திடம் தோல்வியை தழுவியது. அதன் பிறகு தான் இங்கிலாந்து அணியில் பெரிய மாற்றம் நிகழ்ந்தது.

புதிய வீரர்கள்
இதன் பிறகு டிராவர் பெய்லிஸ் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு, இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணியில் பல மாற்றங்கள் நிகழ்ந்தது. இங்கிலாந்து ஒருநாள் அணியில் இடம்பெற்று இருந்த டெஸ்ட் வீரர்கள் அலெஸ்டர் குக், ஸ்டிராஸ் போன்ற வீரர்கள் எல்லாம் அதிரடியாக நீக்கப்பட்டு, அதிரடியாக ஆடும் வீரர்களை அணியில் சேர்த்தார்கள்.

அதிரடி ஆட்டம்
டெஸ்ட் போட்டிக்கு ஒரு அணி, ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கு தனி அணி என்று பிரிக்கப்பட்டது. ஆண்டர்சன், பிராட் போன்ற வேகப்பந்துவீச்சாளர்களும் நீக்கப்பட்டனர். இதில் இங்கிலாந்து ஒருநாள் அணி வீரர்கள் அதிரடியாக விளையாட முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. அதிரடியாக விளையாடி ரன்களை அடித்தால் மட்டுமே அணியில் இடம் என்று கூறப்பட்டது. அதன் பிறகு , இங்கிலாந்து அணி பல்வேறு புதிய சாதனைகளை படைத்தது.

சாம்பியன்கள்
2015 ஆம் ஆண்டு சொதப்பலுக்கு பிறகு, அடுத்த ஆண்டு நடைபெற்ற டி20 உலககோப்பையில் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டி வரை வந்து தோல்வியை தழுவியது. இதனைத் தொடர்ந்து 2019 உலககோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்து, 2021ஆம் ஆண்டு டி20 உலககோப்பை அரையிறுதிப் போட்டி வரை வந்தனர். தற்போது 2022ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் கடந்த 6 ஆண்டில் இங்கிலாந்து சிறந்த 50 ஓவர் மற்றும் டி20 அணியாக விளங்கி வருகிறது.


Click it and Unblock the Notifications











