Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்-ல ஐபிஎல் நடத்தலாம்.. பிசிசிஐ கோரிக்கை.. மறுத்த இங்கிலாந்து - அவ்வளவுதானா?

மும்பை: மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்த, டெஸ்ட் தொடரின் போட்டி அட்டவணையை மாற்ற பிசிசிஐ வைத்த கோரிக்கைக்கு இங்கிலாந்து வாரியம் மறுத்துவிட்டது.

அதாகப்பட்டது.. இந்த ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 31 ஆட்டங்களை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்று பிசிசிஐ படாதபாடு பட்டு வருகிறது. சும்மாவா 3000 கோடியாச்சே!

வெறும் 31 மேட்சஸ் தானே என்று கடந்துவிட முடியாது. இதில், பிசிசிஐக்கு மட்டும் தனியாக வர வேண்டிய வருமானம் 2000 கோடி. எட்டு அணிகளுக்கும் சேர்த்து வர வேண்டியது 1000 கோடி. சேர்த்து மூவாயிரம் கோடி. இந்த 31 போட்டிகளும் நடத்தப்படவில்லை என்றால், ஏற்படவிருக்கும் நஷ்டம் இது. அப்புறம் எப்படி நடத்தாம விடுவாங்க?

 தேதிகளை மாற்ற கோரிக்கை

தேதிகளை மாற்ற கோரிக்கை

சரி.. மேட்டருக்கு வருவோம். இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 18 முதல் 22 வரை இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது. இதற்கான விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து கிளம்புகிறது. அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்கிறது. இதில், இங்கிலாந்து தொடரின் அட்டவணையை மாற்ற பிசிசிஐ கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.

 இங்கிலாந்து மறுப்பு

இங்கிலாந்து மறுப்பு

அதாவது, இங்கிலாந்து உடனான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட சீரிஸ் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கி, செப்.14ம் தேதி முடிவடைகிறது. நாட்டிங்காம், லார்ட்ஸ், லீட்ஸ், ஓவல் மற்றும் ஓல்ட் ட்ராஃபோர்டு ஆகிய ஸ்டேடியங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில், பிசிசிஐ முன்வைத்ததாக கூறப்படும் கோரிக்கை என்னவென்றால், ஓல்ட் ட்ராஃபோர்டில் செப்.10ம் தேதி தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டி தேதியை மாற்றி, சற்று முன்னதாகவே அதாவது ஜுலை மாதமே நடத்தலாம். இதன் மூலம், செப்டம்பர் மாதம் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை அங்கு நடத்த முடியும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

 எந்த மாற்றமும் இல்லை

எந்த மாற்றமும் இல்லை

இதுகுறித்து இங்கிலாந்து வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "கோவிட் -19 இன் சவால்களை நாங்கள் எதிர்கொள்வதால், பி.சி.சி.ஐ உடன் தொடர்ந்து பேசி வருகிறோம். ஆனால் தேதிகளை மாற்றுவதற்கான கோரிக்கை எதுவும் வரவில்லை. ஐந்து டெஸ்ட் போட்டிகளுக்கான அட்டவணையில் எந்த மாற்றமும் இருக்காது" என்றார்.

 அனைத்துக்கும் முற்றுப்புள்ளி

அனைத்துக்கும் முற்றுப்புள்ளி

அதேசமயம், இங்கிலாந்து ஊடகங்கள், பிசிசிஐ தேதி மாற்றுவதற்கான கோரிக்கையை முன்வைத்தது என்று செய்தி வெளியிட்டு வருகின்றன. இதுகுறித்து டைம்ஸ் லண்டன் பத்திரிகையில் வெளியான செய்தியில், "ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்காக, டெஸ்ட் தொடர் அட்டவணையை மாற்றுவது குறித்து இரு வாரியங்களின் அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பிசிசிஐ-யின் இந்த வேண்டுகோள் இங்கிலாந்து வாரியத்துக்கு மிகுந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், கடைசி டெஸ்ட் போட்டிக்கான முதல் மூன்று நாள் டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்கப்பட்டுவிட்டதாகவும், இனி அதில் மாற்றம் செய்வது பெரும் தலைவலியாக இருக்கும்" என்றும் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இங்கிலாந்து வாரிய செய்தித் தொடர்பாளர் மறுப்பு பதில், அனைத்து யூகத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. இங்கிலாந்தில் ஐபிஎல் நடத்தும் ஆப்ஷனையும் ஏறக்குறைய முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது.

Story first published: Friday, May 21, 2021, 14:11 [IST]
Other articles published on May 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+