Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரபல இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஃபிளின்டாப்க்கு விபத்து.. ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதி

லண்டன் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஆண்டிரு ஃபிளின்டாஃப் கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.

பென் ஸ்டோக்ஸ்க்கு எல்லாம் முன்பாகவே தன்னுடைய பேட்டிங் மற்றும் பந்துவீச்சால் சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டராக ஆதிக்கம் செலுத்தியவர் ஃபிளின்டாப்.

79 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3845 ரன்களும், 226 விக்கெட்டுகளும் , 141 ஒருநாள் போட்டியில் 3394 ரன்களும் 169 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.

சாகச நிகழ்ச்சி

சாகச நிகழ்ச்சி

ஆண்டிரு ஃபிளின்டாப், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கவனம் செலுத்தினார். பல்வேறு சாகச நிகழ்ச்சியிலும் ஃபிளின்டாப் பங்கேற்று பிரபலம் ஆனார். இதனைத் தொடர்ந்து டாப் கியர் என்ற கார் பந்தய நிகழ்ச்சியில் ஃபிளின்டாப் பங்கேற்றார்.

படுகாயம்

படுகாயம்

இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு சர்ரே நகரில் உள்ள பனி படர்ந்த ஒடுதளத்தில் நடைபெற்றது. இதில், எதிர்பாராத விதமாக ஃபிளின்டாப் ஓட்டி வந்த கார் , விபத்தில் சிக்கியது. இதனையடுத்து படுகாயமடைந்த அவருக்கு, அங்கிருந்த மருத்துவக்குழுவினர் தீவிர முதல் உதவி சிகிச்சையை அளித்தனர்.

ஹெலிகாப்டர்

ஹெலிகாப்டர்

இதனையடுத்து , ஆண்டிரு பிளாண்டாப் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில், ஃபிளின்டாப் படுகாயம் அடைந்தாலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் இல்லை என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர். எனினும் அவர் மருத்துவமனையில் நீண்ட காலம் தங்கி இருந்து சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

முதல் முறை அல்ல

முதல் முறை அல்ல

ஏற்கனவே 2019ஆம் ஆண்டு இதே நிகழ்ச்சியில் 200 கிமீ வேகத்தில் கார் ஓட்டி பிளின்டாப் விபத்தில் சிக்கினார். ஆனால், அப்போது அவர் பெரும் காயம் ஏதும் ஏற்படாமல், காரிலிருந்து எழுந்து வந்தார். இது குறித்து அப்போது பேசிய ஃபிளின்டாப், டாப் கியர் நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்பட எந்த எல்லைக்கும் செல்வேன். ஆனால் இந்த விபத்திற்கு நான் செய்த தவறு தான் காரணம் என்று கூறி இருந்தார். தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிளின்டாப் விபத்தில் சிக்கி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Story first published: Wednesday, December 14, 2022, 13:20 [IST]
Other articles published on Dec 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+