Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்து அணிக்காக 100 டெஸ்ட் விளையாடிய வீரர் உயிரிழப்பு.. கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்

Graham Thorpe : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் கிரஹாம் தார்பே தன்னுடைய 55 வது வயதில் காலமானார். இது உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இங்கிலாந்து அணிக்காக 1993 ஆம் ஆண்டிலிருந்து 2005 ஆம் ஆண்டு வரை 100 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் கிரகாம் தார்பே விளையாடி இருக்கிறார்.

இதில் தார்பே 6744 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 16 சதங்கள் அடங்கும். இதேபோன்று 82 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக விளையாடி இருக்கிறார். இதைப் போன்று கவுண்டி கிரிக்கெட் சர்ரே அணிக்காக 1988 ஆம் ஆண்டிலிருந்து 2005 ஆம் ஆண்டு வரை சுமார் 20 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார்.

Graham thorpe England cricket team death news

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் பேட்டிங் பயிற்சியாளராக 2022 ஆம் ஆண்டு வரை பணியாற்றி வந்த கிரகாம் தார்பேவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் கிரஹாம் தார்பே தற்போது காலமாகிவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், மிகவும் சோகமான ஒரு விஷயத்தை நாங்கள் வெளியிடுகிறோம். கிரகாம் தார்பே நம்மை விட்டு பிரிந்து விட்டார். நாங்கள் எந்த அளவுக்கு அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறோம் என்பதை விவரிக்க எங்களுக்கு வார்த்தையே கிடையாது. இங்கிலாந்து அணிக்காக விளையாடிய மிகச்சிறந்த வீரர்களின் ஒருவராக கிரஹாம் தார்பே இருந்திருக்கிறார்.

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் விரும்பக்கூடிய வீரராக கிரகாம் தார்பே இருந்தார். அவருடைய திறமையை கேள்வியே கேட்க முடியாது. 13 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவர் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார். சக அணி வீரர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பார். அது மட்டுமல்லாமல் இங்கிலாந்து அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பல பிரமிக்கத்தக்க வெற்றிகளை இங்கிலாந்து அணிக்கு பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

அவருடைய மறைவு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இந்த தருணத்தில் கிரகம் தார்பேவின் மனைவி மற்றும் அவருடைய குழந்தைகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

கிரஹாம் தார்பே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் மீண்டு வர வேண்டும் என்பதற்காக ஸ்டோக்ஸ் அவரின் பெயர் எழுதிய டெஸ்ட் ஜெர்சியை அணிந்து அண்மையில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. அதிரடியாக விளையாடக்கூடிய கிரஹாம் தார்பே தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்தார். இங்கிலாந்து அணிக்காக 1996, 99 ஆகிய உலகக் கோப்பைகளில் கிரகாம் தார்பே விளையாடி இருக்கிறார். இங்கிலாந்து அணியின் கெவின் பீட்டர்சன் வளர்ந்து வந்ததை அடுத்து கிரகாம் தார்பேவின் இடம் 2005 ஆம் ஆண்டு பறிபோனது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, August 5, 2024, 15:10 [IST]
Other articles published on Aug 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+