Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மழையா கெடக்கு.. மேட்ச் நடக்க மாட்டேங்குது.. காட்டுக்குள்ள ஜீப் சவாரி போகப் போறோம்

கொழும்பு : இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் ஆட உள்ளது.

இரு அணிகளுக்கு இடையே ஆன முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

மழையால் போட்டி தடைப்பட்டதை அடுத்து, மறுநாள் இங்கிலாந்து வீரர்கள், இலங்கை காடுகளுக்கு சுற்றுலா சென்று பொழுதை கழித்துள்ளனர்.

இங்கிலாந்து

இங்கிலாந்து வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், லியாம் டாவ்சன், ஒல்லி ஸ்டோன், ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இலங்கை காடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டனர்.

ஜீப் சவாரி செய்தனர்

ஜீப் சவாரி செய்தனர்

கண்டுள்ளா தேசிய பூங்காவில் ஜீப் சவாரி செய்து அங்கே இருந்த காட்டு யானைகளை பார்த்து மகிழ்ந்தனர் இங்கிலாந்து வீரர்கள். இவர்கள் சுற்றுலா புகைப்படங்களை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளது.

சேற்றில் சிக்கிய ஜீப்

இடையே அவர்கள் சென்ற ஜீப் சேற்றில் சிக்கி கொண்டது. பிறகு அங்கே இருந்த ஊழியர்கள் உதவியுடன் ஜீப் மீட்கபட்டு சவாரியை தொடர்ந்துள்ளனர்.

இரண்டாவது ஒருநாள் போட்டி

இரண்டாவது ஒருநாள் போட்டி

இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 278 ரன்கள் குவித்தது. மோர்கன் 92, ஜோ ரூட் 71 ரன்கள் எடுத்தனர். அடுத்து மழை பெய்ததை அடுத்து இலங்கை அணிக்கு டிஎல்எஸ் முறைப்படி இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. அதில் இலங்கை அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Story first published: Saturday, October 13, 2018, 18:14 [IST]
Other articles published on Oct 13, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+