Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலக கோப்பை - இங்கிலாந்து அணி அறிவிப்பு.. நட்சத்திர வீரர் அதிரடி நீக்கம்

லண்டன்: 2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேப்டன் ஜாஸ் பட்லர் தலைமையிலான 15 பேர் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

T20 WC 2022: Australia Squad அறிவிப்பு! Tim David-க்கு வாய்ப்பு | Aanee's Appeal | *Cricket

வரும் அக்டோபர் 16ஆம் தேதி தகுதி சுற்றும், அக்டோபர் 22ஆம் தேதி பிரதான சுற்று போட்டியும் தொடங்குகிறது.

இங்கிலாந்து அணி தனது முதல் போட்டியில் வரும் அக்டோபர் 22ஆம் தேதி ஆப்கானிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

அதிரடி நீக்கம்

அதிரடி நீக்கம்

இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய், டி20 உலகக் கோப்பை அணியிலிருந்து நீக்கப்பட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குடும்பத்துடன் நேரத்தை செலவிடுகிறேன் என்று கூறி, ஐபிஎல் தொடரிலிருந்த கடைசி நேரத்தில் விலகினார். அப்போதிலிருந்தே இவருக்கு சரிவு தொடங்கிவிட்டது. அண்மை காலமாக ஜேசன் ராய் சரியாக விளையாடாததால், அணியிலிருந்த நீக்கப்பட்டுள்ளார்.

அணிக்கு திரும்பிய வீரர்கள்

அணிக்கு திரும்பிய வீரர்கள்

தொடக்க வீரராக பில் சால்ட் தேர்வாகியுள்ளார். எனினும் கேப்டன் பட்லருக்கு பாரிஸ்டோ தான் ஜோடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், டி20 அணிக்கு திரும்பியுள்ளார். இதே போன்று காயம் காரணமாக அண்மை காலமாக விளையாடாத கிறிஸ் வொக்ஸ், மார்க் வுட் ஆகியோரும் டி20 உலகக் கோப்பைக்கு திரும்பியுள்ளனர்.

பலமான அணி

பலமான அணி

சிஎஸ்கே வீரர் மொயின் அலி, லியாம் விலிங்ஸ்டோன், டேவிட் மாலன் மற்றும் சாம் கரண் ஆகியோரும் டி20 உலகக் கோப்பை அணிக்கு தேர்வாகியுள்ளனர். ஹாரி புருக்ஸ், கிறிஸ் ஜார்டன், இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட ரீஸ் டோப்லி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த டி20 உலகக் கோப்பையில் விளையாடிய டைமல் மில்ஸ், ரிசர்வ் வீரராக இடம்பெற்றுள்ளார்.

இங்கிலாந்து அணி விவரம்

இங்கிலாந்து அணி விவரம்

ஜாஸ் பட்லர் (கேப்டன்), ஜானி பாரிஸ்டோ, மொயின் அலி, ஹாரி புருக், சாம் கரண், கிறிஸ் ஜார்டன், லியாம் லிவிங்ஸ்டோன்,டேவிட் மாலன், ஆதில் ரஷித், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டோப்லி, டேவிட் வில்லி, கிறிஸ் வொக்ஸ், மார்க் வுட் .. ரிசர்வ் வீரர்கள் டைமில் மில்ஸ், லியாம் டாசன், ரிச்சர்ட் கிளிசன்.

Story first published: Friday, September 2, 2022, 19:40 [IST]
Other articles published on Sep 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+