
வார்னே மரணம்
இதே போன்று இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் ஆஸ்திரேலியா வந்தால் கேலியும், கிண்டலும் தாங்காது. அப்படி பட்ட வரலாற்றை கொண்ட இரு நாடும், வார்னேவுக்காக வித்தியாசமாக அஞ்சலி செலுத்தினார்கள். ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் வார்னே கடந்த மார்ச் 4ஆம் தேதி உயிரிழந்தார். கிரிக்கெட் ரசிகர்களை அவரது மரணம் அதிர்ச்சி அடைய வைத்தது.

இங்கிலாந்துடனான உறவு
இந்த நிலையில், வார்னே மறைவுக்கு பிறகு இங்கிலாந்தில் முதல் முறையாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. கிரிக்கெட் வாழ்க்கைக்கு பிறகு கொஞ்ச காலம் வார்னே, இங்கிலாந்தில் கிரிக்கெட் வர்ணனையாளராக பணிபுரிந்தார். அவ்வளவு என், கிரிக்கெட் வாழக்கையின் போது கூட வார்னே இங்கிலாந்தில் ஹாம்பிசைர் அணிக்காக கவுண்டியில் விளையாடினார்.

23 வது ஓவரில் 23 விநாடிகள்
இதனால், இங்கிலாந்த, நியூசிலாந்து அணிகள் முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. அப்போது 23 ஓவர் முடிந்ததும், வார்னேவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இரு அணி வீரர்களும் வரிசையாக நின்றனர். மைதானத்தில் இருந்த பார்வையாளர்களும் நின்று, 23 விநாடிகள் கைத் தட்டி தங்களது அஞ்சலியை செலுத்தினர்.
23 என்ன காரணம்?
வார்னே அணிந்திருந்த ஜெர்சியின் நம்பர் 23. வார்னே வாழ்க்கையில் 23 எனற இந்த நம்பஙா பெரும் ஆதிக்கம் செலுத்தியது. இதனால் தான் 23 வது ஓவர் முடிந்ததும் இந்த நெகிழ்ச்சி அஞ்சலி செலுத்தப்பட்டது. இங்கிலாந்தை தனது 2வது தாய் வீடு என்று கூறியுள்ள வார்னே, இங்கு 22 சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடி 129 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











