For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடப்பாவிங்களா.. இந்தியாவின் காற்று தரம் மீது பழி போடுவதா? மூச்சு வாங்குது - ஜோ ரூட் குற்றச்சாட்டு

மும்பை : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனாக களம் இறங்கியுள்ள இங்கிலாந்து அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. பலம் குன்றிய ஆப்கானிஸ்தானை எதிர் கொண்டு தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணி, அதன் பிறகு மும்பையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் யாருமே எதிர்பார்க்காத படுதோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணி விளையாடிய நான்கு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு மிகவும் கடினமாக இருக்கும்.

England cricketer Joe root speaks about india air quality created controversy

இந்த நிலையில் தாங்கள் மோசமாக விளையாடுவதற்கு காரணம் இந்தியாவின் சுற்றுச்சூழல் தான் என்பது போல் ஜோ பேசியிருக்கிறார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர் என் வாழ்நாளில் இதுபோல் உள்ள ஒரு சூழலில் இதற்கு முன்பு நான் விளையாடியதே கிடையாது. கண்டிப்பாக நான் கடும் வெப்பம் உள்ள சூழலில் விளையாடி இருக்கிறேன்.

ஆனால் களத்தில் நின்று விளையாடும் போது மூச்சு திணறுகிறது. சில சமயம் நமது மூச்சை நாமே சாப்பிடுவது போல் இருந்தது. இது போல் நான் இதுவரை கண்டதே இல்லை. நாங்கள் மட்டும் அல்ல தென்னாப்பிரிக்க வீரர் கிளாசென் கூட பேட்டிங் செய்து விட்டு அந்த ஆட்டத்தில் பில்டிங்கிற்கு வரவே இல்லை. காரணம் இது போன்ற ஒரு சூழலில் விளையாடிவிட்டு அதிலிருந்து மீள்வது மிகவும் கடினம்.

நீங்கள் களத்திற்கு வந்தாலே உங்களுடைய ஜெர்சி எல்லாம் வியர்வையில் முற்றிலும் நினைந்து விடுகிறது. வழக்கத்தை விட அதிக அளவில் மூச்சு வாங்குவதாக நான் நினைக்கிறேன். நமது உடல் தகுதி நல்ல நிலையில் இருக்கிறது என்று நமக்கு தெரியும். அதற்காக கடும் முயற்சிகளை எல்லாம் நாங்கள் செய்திருக்கிறோம். ஆனால் இங்கு விளையாடிய போது எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

எங்கள் அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரசீத் பில்டிங் செய்துவிட்டு டிரெஸ்ஸிங் ரூமுக்கு சென்று மிகவும் கஷ்டப்பட்டார். எங்களால் சரியாக விளையாட முடியாத காரணத்திற்கு காற்றின் தரம் ஒரு காரணமா என்று எனக்குத் தெரியவில்லை. காற்றின் தரம் எவ்வளவு இருக்கிறது என்பதை பற்றி பேசும் அளவுக்கு எனக்கு தகுதி கிடையாது. ஆனால் நாங்கள் மும்பையில் விளையாடும் போது மிகவும் கடினமான சூழலை கண்டோம்.

மேலும் மைதானத்தில் ஒரு புறத்திலிருந்து பார்க்கும் போது எதிர்புறம் வெயில் சுளிர் என்று அடித்தது. பந்தை பார்க்க கூட முடியவில்லை. காற்றின் தரத்தில் பிரச்சனையா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இதற்கு முன்பு நான் இதுபோன்ற அனுபவத்தை கண்டதே இல்லை என ஜோ ரூட் கூறினார். இங்கிலாந்து வீரர்கள் சரியாக விளையாடாத நிலையில் இந்தியாவின் காற்றில் தரம் குறித்து அவர்கள் குற்றச்சாட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

Story first published: Tuesday, October 24, 2023, 21:39 [IST]
Other articles published on Oct 24, 2023
English summary
England cricketer Joe root speaks about india air quality created controversy அடப்பாவிங்களா.. இந்தியாவின் காற்று தரம் மீது பழி போடுவதா? மூச்சு வாங்குது - ஜோ ரூட் குற்றச்சாட்டு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+