For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யார் சிறந்த கேப்டன்..?? நேரலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மொயின் அலி, அலெஸ்டர் குக்..!!

லண்டன்: ஆஷஸ் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3க்கு0 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இதனால் கேப்டன் ஜோ ரூட் மீது கடும் விமர்சனங்கள் எழுந்த வருகின்றன.

ஜோ ரூட்டை கேப்டன் பதவியை விட்டு தூக்க வேண்டும் என்று ஒரு பிரிவும், நீக்க கூடாது என்று மற்றொரு பிரிவும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக தொலைக்காட்சி நேரலையின் போது முன்னாள் கேப்டன் அலஸ்டர் குக்கும், மொயின் அலியும் பேசினர்

யார் சிறந்த கேப்டன்

யார் சிறந்த கேப்டன்

அப்போது நெறியாளர், இங்கிலாந்து அணியின் கேப்டன்களான குக், ஜோ ரூட் இருவருக்கும் கீழ் நீங்கள் விளையாடியுள்ளீர்கள். இவர்களுக்குள் என்ன வேறு பாடு உள்ளது என்று மொயின் அலியிடம் கேட்டார். அதற்கு மொயின் அலி, இருவரின் செயல்பாடும் வித்தியாசமாக இருக்கும். குக் தலைமையில் நான் நன்கு பேட்டிங் செய்தேன், ஜோ ரூட் தலைமையில் நல்ல பந்துவீச்சாளராக விளங்கினேன் என்று கூறினார்.

சூடான குக்

சூடான குக்

இதனால் கடுப்பான அலெஸ்டர் குக், நான் மொயின் அலியை அணியிலிருந்து நீக்கியதே கிடையாது. ஆனால் என் மீது விமர்சனம் வைக்கிறார் மொயின் அலி. சரி சொல்லுங்கள் ஜோ ரூட், உங்களை எத்தனை முறை அணியிலிருந்து நீக்கினார் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, மொயின் அலி நீங்கள் சொன்னது சரி தான். ஆனால் குக், என்னை பேட்டிங் வரிசையில் தொடக்க வீரர் முதல் 9ஆம் நிலை வீரர் வரை அனைத்து இடத்திலும் எனது முதல் ஆண்டிலே இறக்கி சோதனை செய்தார் என்று மீண்டும் விமர்சனம் செய்தார்

மொயின் அலி தடாலடி

மொயின் அலி தடாலடி

இதனால் மேலும் சூடான அலெஸ்டர் குக், மொயின் அலிக்கு நான் வாய்ப்பு கொடுத்தேன். அவர் தொடக்க வீரரா இல்லை கடைசி வரிசையில் விளையாடக் கூடிய வீரரா என்று எனக்கு தெரியவில்லை. அதை முடிவு செய்ய தான் இந்த மாற்றம் நிகழ்ந்தது என்று கூறினார்.இதற்கு பதிலடி தந்த மொயின் அலி, ஜோ ரூட் வீரர்களுடன் நன்கு பழக கூடியவர். தோள் மீது கை போட்டு பேசுவார்

Recommended Video

IPL 2022: SMAT Stars Who Could Make Debut | OneIndia Tamil
வாக்குவாதம்

வாக்குவாதம்

அதற்காக அலெஸ்டர் குக், வீரரை மதிக்க மாட்டார் என்று சொல்லவில்லை. ஜோ ரூட் அவரை விட அதிகம் ஆதரவு தருவார் என்று கூறினார். இதனையடுத்து இதற்கு பதில் அளித்த அலெஸ்ட்ர் குக், இதனை என்னால் இனி எப்படி எடுத்து கொள்ள முடியும் என்று தெரியவில்லை. அருமையான விடுமுறைக்கு பிறகு நல்ல மனநிலையுடன் வந்து மொயின் அலியிடம் சிக்கி கொண்டேன் என்று கூறினார். நகைச்சுவையாக தொடங்கிய உரையாடல், பின்னர் வாக்குவாதமாக மாறியது, பரபரப்பை ஏற்படுத்தியது.

Story first published: Saturday, January 8, 2022, 11:09 [IST]
Other articles published on Jan 8, 2022
English summary
England cricketers Alastair cook, Mooen ali exchanged words in onair telecast over root யார் சிறந்த கேப்டன்..?? நேரலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மொயின் அலி, அலெஸ்டர் குக்..!!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+