Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரெண்டு குழுவா இந்தியாவுக்கு வராங்க இங்கிலாந்து வீரர்கள்... ஸ்டிரிக்ட் குவாரன்டைனுக்கு திட்டம்

டெல்லி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான தொடர்கள் நடந்து முடிந்துள்ளன. இதில் 2 தொடர்களை இந்தியா வெற்றி கொண்டுள்ளது.

இதையடுத்து வரும் 5ம் தேதி முதல் இங்கிலாந்து அணியுடன் 3 வடிவங்களிலும் விளையாடவுள்ளது இந்திய அணி. முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து வீரர்கள் இரண்டு பிரிவுகளாக இந்தியா வரவுள்ளனர்.

2 தொடர்களில் வெற்றி

2 தொடர்களில் வெற்றி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டித் தொடர்கள் நடந்து முடிந்துள்ளன. இதில் டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களை இந்தியா வெற்றி கொண்டுள்ளது. கடந்த 2018-19க்கு பிறகு மீண்டும் டெஸ்ட் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

சென்னையில் 2 டெஸ்ட்கள்

சென்னையில் 2 டெஸ்ட்கள்

இதையடுத்து இந்தியாவில் இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் 5ம் தேதி முதல் டெஸ்ட் தொடரில் பங்கேற்று ஆடவுள்ளது. 4 போட்டிகளை கொண்ட இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளன. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

2 டெஸ்ட் போட்டித் தொடர்

2 டெஸ்ட் போட்டித் தொடர்

தற்போது இலங்கையுடன் 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது இங்கிலாந்து. இதில் நடைபெற்ற முடிந்துள்ள ஒரு போட்டியில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. வரும் 22ம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கி 26ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இங்கிலாந்திலிருந்து ஒரு குழு வருகை

இங்கிலாந்திலிருந்து ஒரு குழு வருகை

இதையடுத்து வரும் 27ம் தேதி ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி சென்னை வரவுள்ளது. இதனிடையே இந்த தொடரில் இடம்பெறாத துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட சிறிய அளவிலான வீரர்கள் முன்னதாக வரும் 22ம் தேதி சென்னை வரவுள்ளனர்.

இறுதி முடிவு அறிவிக்கப்படும்

இறுதி முடிவு அறிவிக்கப்படும்

இவர்களுக்கு கடுமையான குவாரன்டைன் விதிக்கப்பட உள்ளதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் எத்தனை நாட்கள் இவர்கள் குவாரன்டைனில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இந்த விதிமுறைகளை இங்கிலாந்து அணி வீரர்கள் கடுமையாக பின்பற்றுவார்கள் என்று இங்கிலாந்து தரப்பில் கூறப்பட்டுள்ள.

Story first published: Wednesday, January 20, 2021, 11:24 [IST]
Other articles published on Jan 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+