Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி.யின் உலக சாதனையை காலி செய்த இங்கிலாந்து...!! ஒரே நாளில் அடுத்தடுத்து அரங்கேறிய சாதனைகள்..!!

கார்டிப்: வங்கதேச அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், 386 ரன்கள் குவித்த இங்கிலாந்து, ஆஸி.யின் உலகசாதனையையும் தவிடு பொடியாக்கி இருக்கிறது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 12வது லீக் ஆட்டம் கார்டிப்பில் நடைபெற்றது. இதில் இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி மோர்டசா தலைமையிலான வங்கதேச அணியுடன் பலப்பரீட்சை நடத்தின. போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம்.

உடனடியாக பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இங்கிலாந்து தொடக்க வீரர்களாக ஜாசன் ராய், பெயர்ஸ்டோவ் களமிறங்கினர். ஆரம்பமே அதிரடி தான். இருவருமே கன ஜோராக தொடக்கம் தந்தனர். ரன்களும் வந்து குவிந்தன.

வங்கதேசத்தின் திட்டம்

வங்கதேசத்தின் திட்டம்

ராய், பெயர்ஸ்டோ ஆகிய இருவருமே வலது கை பேட்ஸ்மேன்கள் என்பதால், வங்கதேச கேப்டன் ஒரு முக்கிய விஷயத்தை செயல்படுத்தினார். இருவரும் சுழற்பந்து வீச்சில் தடுமாறுவார்கள் என்று கால்குலேஷன் செய்து, இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஷாகிப் அல் ஹாசனை களம் இறக்கினார். ஆனால் நடந்ததோ வேறு.

திணறிய பவுலிங்

திணறிய பவுலிங்

மோர்டசாவின் திட்டத்தை ராயும், பெயர்ஸ்டோவும் தவிடுபொடியாக்கினர். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களை அவுட்டாக்க முடியாமல் வங்கதேச அணி பவுலர்கள் திணறினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 128 ரன்கள் எடுத்தனர்.

நங்கூரம் ராய்

நங்கூரம் ராய்

ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நங்கூரமாக நின்றார் ராய். வங்கதேச பவுலிங்கை பிரித்து மேய்ந்தார். அவர் அடித்த ரன்கள் 153. அதில் 14 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் அடங்கும்.

இமாலய ஸ்கோர்

இமாலய ஸ்கோர்

இறுதியாக இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 386 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை குவித்தது. இந்த போட்டியில், இங்கிலாந்து அணி, ஆஸி.யின் ஒரு சாதனையை அடித்து, துவைத்து காயப்போட்டிருக்கிறது.

இங்கிலாந்து உலக சாதனை

இங்கிலாந்து உலக சாதனை

அதாவது.... சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தொடர்ச்சியாக அதிக முறை 300 ரன்களுக்கு மேல் ஆஸி. குவித்து தள்ளியிருக்கிறது. 6 முறை ஆஸ்திரேலியா அந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. தற்போதைய வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அந்த சாதனையை வீழ்த்தியிருக்கிறது.

அதிகபட்ச ஸ்கோர்

அதிகபட்ச ஸ்கோர்

ஆஸ்திரேலிய அணியின் 6 முறை என்ற உலக சாதனையை இங்கிலாந்து அணியானது 7 முறை சாதித்து அசத்தியிருக்கிறது. மேலும், உலக கோப்பை கிரிக்கெட் அரங்கில் இங்கிலாந்து அணி, 386 ரன்கள் தனது அதிகபட்ச ஸ்கோரையும் எட்டி சாதனை படைத்திருக்கிறது.

Story first published: Saturday, June 8, 2019, 21:04 [IST]
Other articles published on Jun 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+