இதுதான் வீக்னஸ்.. மொத்த இந்திய டீமிற்கும் "கிராப்" போட்ட இங்கிலாந்து அணி.. என்னமோ நடக்க போகிறது?!
சென்னை: இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் டாப் ஆர்டர் வீரர்களை காலி செய்வது எப்படி என்று இங்கிலாந்து அணி வீரர்கள் பெரிய வியூகம் வகுத்து உள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தியா இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது . இதற்கான இந்திய அணி இன்று மாலை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு டெஸ்ட் போட்டிகளும் சென்னையில் நடப்பதால் இந்தியாவிற்கு கொஞ்சம் சாதகமாக சூழ்நிலை உருவாகி உள்ளது.

சென்னை
இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் டாப் ஆர்டர் வீரர்களை காலி செய்வது எப்படி என்று இங்கிலாந்து அணி வீரர்கள் பெரிய வியூகம் வகுத்து உள்ளனர். சென்னையில் இந்த போட்டி நடக்கிறது. ஸ்பின் பிட்சிற்கு ஏற்ற வகையில் இந்த பிட்ச் இருக்கும். இதனால் அதற்கு ஏற்றபடி இங்கிலாந்து அணி திட்டம் வகுத்து உள்ளது.

வீரர்கள்
அதன்படி கோலி கடந்த ஒன்றரை வருடத்தில் எப்படி எல்லாம் அவுட் ஆனார். ரஹானே வீக்னஸ் என்ன, புஜாராவை உடனே காலி செய்வது எப்படி என்று திட்டம் வகுத்து உள்ளனர்.சுப்மான் போன்ற வீரர்களின் முதல்தர போட்டிகளை பார்த்து அதற்கும் தகுந்தபடி பிளான் வகுத்து உள்ளனர்.

இங்கிலாந்து
இன்னொரு பக்கம் பண்டை வேகமாக விக்கெட் எடுப்பது எப்படி, ரோஹித் சர்மாவிற்கு ஷார்ட் பந்துகளை தவிர்ப்பது என்று பல விஷயங்களை ஆய்வு செய்து ஒவ்வொரு வீரருக்கும் ஒரு கிராப் வரைந்து திட்டம் போட்டு உள்ளனர். இதனால் இங்கிலாந்து அணி முறையான திட்டமிடலுடன் இறங்க உள்ளது.

திட்டம்
அதிலும் மெயின் அலி, ஆண்டர்சன் ஆகியோரை இங்கிலாந்து அணி துருப்பு சீட்டாக பயன்படுத்தும் என்கிறார்கள். இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்திய குஷியில் உள்ளது. இதனால் இந்திய அணிக்கு எதிராக திட்டத்துடன் இறங்கி இங்கிலாந்து வெற்றிபெற வாய்ப்புள்ளது.

வாய்ப்பு
இங்கிலாந்து அணியை இந்தியா குறைத்து மதிப்பிடும். சொந்த மண்ணில் போட்டி நடப்பதால் இந்தியா கொஞ்சம் மிதப்பில் இருக்கும். இதை இங்கிலாந்து அணி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது.


Click it and Unblock the Notifications