
ஆஸ்திரேலியா
மைக்கேல் கிளார்க் (கேப்டன்(, ஜார்ஜ் பெய்லி (துணை கேப்டன்), பட் கமின்ஸ், சேவியர் டொகர்டி, ஜேம்ஸ் பாக்னர், ஆரோன் பிஞ்ச், பிராட் ஹடின் விக்கெட் கீப்பர், ஜோஸ் ஹசில்வுட், மிட்சேல் ஜான்சன், மிட்சேல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மிட்சேல் ஸ்டார்க், டேவிட் வார்னர், ஷேன் வாட்சன். பயிற்சியாளர்: டேரன் லீமேன்.

இங்கிலாந்து
இயோன் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆன்டர்சன், கேரி பல்லான்ஸ், இயான் பெல், ரவி போபாரா, ஸ்டூவர்ட் பிராட், ஜோஸ் பட்லர் விக்கெட் கீப்பர், ஸ்டீவன் பின், அலேக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஜோர்டான், ஜோ ரூட், ஜேம்ஸ் டைலர், ஜேம்ஸ் டிரெட்வெல், கிறிஸ் வோக்ஸ். பயிற்சியாளர்: மூரேஸ்.

மோதல் எப்படி?
ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் இதுவரை 130 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அதில் 76 போட்டிகளில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவின் கையே ஓங்கியுள்ளது. 49 போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகள் டையிலும், 3 போட்டிகள் ரிசல்ட் வராமலும் முடிந்துள்ளன.

ஆஸ்திரேலியா ஆதிக்கம்
கடந்த 4 வருடங்களில் இவ்விரு அணிகளும் 15 முறை மோதியுள்ளன. அதில் 13 முறை ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து இதுவரை 11 போட்டிகளில் விளையாடி அதில் 8 போட்டிகளை தோற்றுள்ளது. கடைசியாக அந்த அணி இந்த மைதானத்தில் 2007ல்தான் வெற்றி பெற்றுள்ளது.

பிரிவு
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications