Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

600 விக்கெட்டுகளை நெருங்கும் இங்கி. வீரர் பிராட்.. அயர்லாந்துக்கு எதிராக தரமான சம்பவம்..இங்க பாருங்க

லண்டன்: அயர்லாந்து அணிக்கு எதிரான 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பிராட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இங்கிலாந்து அணியின் வேகத்தில் அயர்லாந்து அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.

ஐபிஎல் தொடர் முடிவடைந்த அடுத்த 2 நாட்களில் இங்கிலாந்து அணிக்கான கிரிக்கெட் சீசன் தொடங்கியுள்ளது. ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி 7ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது.

England Fast bowler Stuart Broad picks 5 Wickets against Ireland at Lords Stadium

இங்கிலாந்து அணியின் சீனியர் வீரர்களான ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோருக்கு கடைசி ஆஷஸ் தொடராக பார்க்கப்பட்டு வருகிறது. அதேபோல் பிராட் அபாரமான ஃபார்மில் இருப்பதால், இந்தா ஆஷஸ் தொடரின் நாயகனாக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த 11 போட்டிகளில் களமிறங்கிய பிராட், 50 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இந்த நிலையில் இன்று அயர்லாந்து அணிக்கு எதிரான 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி களமிறங்கியுள்ளது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. இதில் இங்கிலாந்து அணியின் பிராட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன் மூலம் ஸ்டூவர்ட் பிராட் 581 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டூவர்ட் பிராட் 20வது முறையாக ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ஏற்கனவே இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் 700 விக்கெட்டுகளை வீழ்த்த காத்திருக்கும் நிலையில், ஆஷஸ் தொடர் முடிவதற்குள் பிராட் 600 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, June 1, 2023, 21:50 [IST]
Other articles published on Jun 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+