For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கதையில் யாரும் எதிர்பார்க்காத இப்படி ஒரு டிவிஸ்ட்டா…?? ரசிகர்கள் மகிழ்ச்சி..!!

பிரிஸ்பேன்: இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 147 ரன்களுக்கு சுருண்டது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி தங்களது 2வது இன்னிங்சை தொடர்ந்தனர்.

நல்ல தொடக்கம்

நல்ல தொடக்கம்

முதல் விக்கெட்டை சொற்ப ரன்களில் இழந்தாலும், பின்னர் வார்னருடன் ஜோடி சேர்ந்த மார்னஸ் லாபஸ்சேங், நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார். வார்னர் 94 ரன்களில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் விளையாடிய லாபஸ்சேங் 74 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 2வது விக்கெட்டுக்கு வார்னர், லாபஸ்சேங் ஜோடி 156 ரன்களை சேர்த்தது.240 ரன்களுக்கு 6 விக்கெட் என்று ஆஸ்திரேலியா மீண்டும் சரிவை காண, டிராவிஸ் ஹேட் அதிரடியாக விளையாடி 85 பந்துகளில் சதம் விளாசினார். இதில் 12 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும்.

அதிரடி சதம்

அதிரடி சதம்

ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 343 ரன்கள் என்ற ஸ்கோருடன் 3வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. 112 ரன்களுடன் விளையாடிய டிராவிஸ் ஹேட் 152 ரன்கள் சேர்த்தார். மிட்செல் ஸ்டார்க் தன் பங்கிற்கு 35 ரன்கள் சேர்க்க ஆஸ்திரேலிய அணி 425 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 278 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கும் முனைப்புடன் இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.

பொறுப்பான ஆட்டம்

பொறுப்பான ஆட்டம்

தொடக்க வீரர் ஹசிப் ஹமீது 27 ரன்களும்,ரோரி பெர்ன்ஸ் 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 61 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தடுமாறியது. அப்போது தான் ஆட்டத்தில் ஒரு டிவிஸ்ட் நேர்ந்தது.யாரும் எதிர்பாராத வகையில் டேவிட் மாலனும், கேப்டன் ஜோ ரூட்டும் நங்கூரம் பாய்ந்து ஆடுகளத்தில் நின்று ரன் சேர்க்க தொடங்கினர். இதனால் இங்கிலாந்தின் ஸ்கோர் மெல்ல மெல்ல நகர்ந்தது. ஆடுகளத்தின் ஈரப்பதம் குறைந்ததால் பேட்டிங்கிற்கு சாதகமாக களம் மாறியது.

Recommended Video

Ben Stokes bowls 14 no-balls! 3rd umpire misses overstepping in Gabba Ashes Test | OneIndia Tamil
திரில்லர்

திரில்லர்

இதனால் இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர்.தற்போது ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 2 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் எடுத்தது.டேவிட் மாலன் 80 ரன்களுடனும், ஜோ ரூட் 86 ரன்களுடனும் உள்ளனர். தற்போது ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை விட 58 ரன்களே இங்கிலாந்து பின்தங்கியுள்ளது. நாளை இங்கிலாந்து மட்டும் பெரிய ஸ்கோர் அடித்து தாக்குப் பிடித்தால் ஆட்டம் இன்னும் சூடு பிடித்துவிடும்.

Story first published: Friday, December 10, 2021, 19:53 [IST]
Other articles published on Dec 10, 2021
English summary
First Ashes Test Between Australia and England is in Thriller Position. England Fight back in second innings as trails narrow down to 58 runs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+