
டி20 போட்டி தொடர்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் அந்த அணி இழந்த நிலையில் தற்போது 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்தும், 2-வது மற்றும் 4வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

தவறு
இந்நிலையில் கடைசியாக நடைபெற்ற 4வது டி20 போட்டி குறித்து புதிய பிரச்சினை கிளம்பியுள்ளது. போட்டியின் போது பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதாக கூறி இங்கிலாந்து அணி வீரர்களின் ஊதிய விகிதத்தில் 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 186 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 177 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

விசாரணை
ஐ.சி.சி.யின் வீரர்களுக்கான நடத்தை விதிகள் 2.22ன் கீழ், குறிப்பிட்ட கால நேரத்திற்குள் பந்துவீச தவறும் பட்சத்தில், உரிய விசாரணை நடத்தப்பட்டு பின்னர் அந்த அணியின் வீரர்களின் போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த தவறுக்காக இங்கிலாந்து அணியின் வீரர் மோர்கன் வருத்தம் தெரிவித்து கொண்டார். அபராத தொகை செலுத்த கூறியதற்கும் அவர் ஒப்பு கொண்டார். இதனால், விசாரணை நடத்த வேண்டிய அவசயமில்லாமல் போயுள்ளது.

4வது டி20 போட்டி
இரு அணிகளுக்கும் இடையேயான 5வது டி20 போட்டி இன்று இரவு அகமதபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கவுள்ளது. இரு அணிகளும் சம நிலையில் உள்ளதால் தொடரை வெல்ல கடும் போராட்டத்தில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் பந்துவீச முந்தைய போட்டியில் அதிக நேரம் எடுத்துக்கொண்டது போல் இந்த போட்டியில் நடக்காமல் இங்கிலாந்து பார்த்துக்கொள்ளும்.


Click it and Unblock the Notifications