Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்து நிதான ஆட்டம்.. உணவு இடைவேளையில் 4 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள்!

லண்டன்: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 107 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதைத் தொடர்ந்து விளையாடும் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின்போது 4 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் எட்பாஸ்டன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 31 ரன்களில் வென்றது.

 England first innings started in the second test

இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. மழையால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

இரண்டாவது நாளான நேற்று டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது. மழை அடிக்கடி குறுக்கிட ஆட்டம் பலமுறை தடைப்பட்டது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 35.2 ஓவர்களில் 107 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அஸ்வின் அதிகபட்சமாக 29 ரன்களும், விராட் கோஹ்லி 23 ரன்களும் எடுத்தனர்.

மழையால் மைதானம் ஸ்விங் பவுலிங்குக்கு சாதகமாக அமைந்தது. ஜேம்ஸ் ஆன்டர்சன் 13.2 ஓவர்களில் 20 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டை வீழ்த்தினார்.

மூன்றாம் நாளான இன்று இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை துவக்கியுள்ளது. உணவு இடைவேளையின்போது 4 விக்கெட் இழப்புக்கு 89 ரன்களுடன் உள்ளது. இந்தியாவைவிட முதல் இன்னிங்ஸில் 18 ரன்கள் பின்தங்கியுள்ளது.

அலிஸ்டர் குக் 21, கீடன் ஜென்னிங்ஸ் 11, ஜோ ரூட் 19, ஒல்லி போப் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இந்திய தரப்பில் முகமது ஷமி 2 விக்கெட்களை வீழ்த்தினார். இஷாந்த் சர்மா மற்றும் ஹார்திக் பண்டயா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Story first published: Saturday, August 11, 2018, 17:59 [IST]
Other articles published on Aug 11, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+