Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்து ரொம்ப “வீக்கா” இருக்கு...இதை பயன்படுத்தி இந்தியா 4வது டெஸ்டில் வெல்லுமா?

சௌதாம்ப்டன் : இந்தியா - இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற உள்ளது. இதில் இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

தொடரில் 1-2 என பின் தங்கி இருக்கும் இந்தியா இந்த போட்டியில் வென்றால் தொடர் 2-2 என சம நிலையை எட்டுவதோடு, வெற்றியாளரை நிர்ணயிக்கும் இறுதி டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக மாறும்.

இந்தியாவின் பலம், பலவீனம் ஒரு பக்கம் இருந்தாலும், இங்கிலாந்தின் பலவீனங்கள் கூட இந்தியாவின் பலம் தான். அந்த அடிப்படையில் பார்த்தால், இங்கிலாந்து இந்தியாவை விட சற்று பின்தங்கியே உள்ளது.

தலையே சரியில்லை

தலையே சரியில்லை

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் சரியான பார்மில் இல்லை. முதல் டெஸ்டின் முதல் இன்னிங்க்ஸில் 80 ரன்கள் அடித்தார். அதன் பின் நான்கு இன்னிங்க்ஸ்களில் 14, 19, 16, 13 என இருபது ரன்களை கூடத் தாண்டவில்லை. இந்தியா நான்காவது டெஸ்டிலும் இவரை ரன் அடிக்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், ஐந்தாவது போட்டிக்கும் இந்தியாவுக்கு உதவியாக இருக்கும்.

காயத்தில் இருக்கும் பேர்ஸ்டோ

காயத்தில் இருக்கும் பேர்ஸ்டோ

இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன பேர்ஸ்டோ காயத்தில் இருக்கிறார். இந்த போட்டியில் அவர் கீப்பிங் செய்யப் போவதில்லை என தகவல்கள் வந்துள்ளன. என்றாலும் நல்ல பேட்ஸ்மேனான பேர்ஸ்டோ, காயத்தில் இருப்பதை பயன்படுத்தி அவரை விரைவாக வெளியேற்ற வேண்டும்.

சுழல் பந்துவீச்சு வேலை செய்யவில்லை

சுழல் பந்துவீச்சு வேலை செய்யவில்லை

அதில் ரஷித் இங்கிலாந்து அணியில் சுழல் பந்து வீச்சாளராக சேர்க்கப்பட்டார். எனினும், மூன்று டெஸ்டில் இதுவரை 48 ஓவர்கள் மட்டுமே வீசி இருக்கிறார். மொத்தத்தில், அவரது சுழல் எந்த வேலையும் இல்லாமல் தான் இருக்கிறது. இந்திய பேட்ஸ்மேன்கள் அதை நான்காவது போட்டியில் நிச்சயம் தொடர வேண்டும். இந்த போட்டியில் சுழல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தால், மொயீன் அலியும் சுழல் பந்து வீசுவார் என்பதால் இந்தியாவிற்கு மேலும் சிரமமாக மாறி விடும்.

துவக்கம் சரியில்லை

துவக்கம் சரியில்லை

இங்கிலாந்து அணி சரியான துவக்கம் இல்லாமல் தடுமாறி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் ஆறு இன்னிங்க்ஸ்களில் ஒரே ஒரு முறை தான் 50க்கு மேல் துவக்கக் கூட்டணி ரன் எடுத்துள்ளது. அலஸ்டர் குக் மற்றும் ஜென்னிங்க்ஸ் இருவரும் முதல் சில ஓவர்களில் தங்கள் விக்கெட்டை இழந்து விடுகிறார்கள். இவர்கள் இருவருக்கும் அவர்கள் தடுமாறும் வகையில் பந்து வீச வேண்டும். இஷாந்த் சர்மா அலஸ்டர் குக்கை இந்த தொடரில் மட்டும் மூன்று முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பென் ஸ்டோக்ஸ் பில்டப் மட்டும் தான்

பென் ஸ்டோக்ஸ் பில்டப் மட்டும் தான்

பென் ஸ்டோக்ஸ் மீது பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது. எனினும், இரண்டு டெஸ்டில் ஆடிய அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆல்-ரவுண்டராக இருக்கும் ஸ்டோக்ஸ் இதுவரை ஆட்டத்தை திருப்பும் அளவிற்கு எதுவும் செய்யவில்லை. இவரை, இதே போல சமாளித்தால் போதும். இந்தியாவிற்கு அது பெரிய பலமாக இருக்கும்.

Story first published: Thursday, August 30, 2018, 14:48 [IST]
Other articles published on Aug 30, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+