Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா திருப்பி அடிக்கும்... பார்த்துக்கிட்டே இருங்க... நாசர் ஹூசைன் எச்சரிக்கை

லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மோசமான தோல்வியை கண்டுள்ளது.

இந்நிலையில் இந்தியா மீண்டும் சிறப்பாக வந்து இங்கிலாந்தை அடுத்த போட்டிகளில் முறியடிக்கும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது இன்னிங்சில் 36 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்த இந்தியா அந்த தொடரை வெற்றி கொண்டதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்தியாவின் மோசமான தோல்வி

இந்தியாவின் மோசமான தோல்வி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் இங்கிலாந்து சிறப்பாக விளையாடி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை முறியடித்துள்ளது.

வெற்றி குறித்து கோலி நம்பிக்கை

வெற்றி குறித்து கோலி நம்பிக்கை

இதையடுத்து சென்னையில் ஒரு டெஸ்ட் மற்றும் அகமதாபாத்தில் 2 டெஸ்ட் போட்டிகள் என அடுத்தடுத்து 3 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த போட்டிகளில் இந்தியா சிறப்பாக விளையாடும் என்று முதல் போட்டியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.

நாசர் ஹூசைன் எச்சரிக்கை

நாசர் ஹூசைன் எச்சரிக்கை

இந்நிலையில் முதல் போட்டியில் தோல்வியுற்றாலும் அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணி திருப்பி தாக்கும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மற்றும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளர் நாசர் ஹூசைன் இங்கிலாந்து அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதை இங்கிலாந்து அணி எதிர்பார்த்து செயலாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தொடரை கைகொண்ட இந்தியா

தொடரை கைகொண்ட இந்தியா

கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 36 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மோசமான தோல்வியை இந்தியா அடைந்து அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றியதையும் நாசர் ஹூசைன் சுட்டிக் காட்டியுள்ளார்.

Story first published: Wednesday, February 10, 2021, 14:45 [IST]
Other articles published on Feb 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+