Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"தீ" இருக்கு.. திறமை இருக்கு.. நாங்களும் "கப்"பை வெல்ல முடியும்.. சொல்வது அலெக்ஸ்!

கேப்டவுன்: இங்கிலாந்து அணியும் திறமையான அணிதான். எங்களிடமும் "பயர்பவர்" உள்ளது. இங்கிலாந்து அணியாலும் டுவென்டி 20 உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்று இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் அலெக்ஸ் ஹேல்ஸ் கூறியுள்ளார்.

இந்தியாவில் நடைபெறவுள்ள டுவென்டி 20 உலகக் கோப்பையை இந்தியாதான் வெல்லும் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இங்கிலாந்து வெல்லும் தகுதியுடன் உள்ளதாக அந்த அணியின் அலெக்ஸ் கூறியுள்ளார்.

பேட்டிங் மட்டுமல்லாமல் பந்து வீச்சிலும் இங்கிலாந்து சிறப்பாக இருப்பதாக கூறியுள்ள அலெக்ஸ், திறமை மிகுந்த இங்கிலாந்து அணி நிச்சயம் கோப்பையை வெல்ல முடியும் என்றும் கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்க பயணம்

தென் ஆப்பிரிக்க பயணம்

இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து ஒரு நாள் தொடரில் ஆடியது. அதில் ஒரு நாள் தொடரை 2-3 என்ற கணக்கி தென் ஆப்பிரிக்காவிடம் இழந்தது. இத்தனைக்கும் முதல் இரு ஒரு நாள் போட்டிகளையும் இங்கிலாந்துதான் வென்றிருந்தது.

அசத்திய ஹேல்ஸ்

அசத்திய ஹேல்ஸ்

இந்தத் தொடரில் ஹேல்ஸ் சிறப்பாக ஆடி ரன் குவித்திருந்தார். 4 அரை சதங்களை அவர் போட்டிருந்தார். மேலும் ஒரு சதத்தையும் அவர் அடித்தார்.

நம்பிக்கை

நம்பிக்கை

இந்த நிலையில் இங்கிலாந்தால், டுவென்டி 20 உலகக் கோப்பையை வெல்ல முடியுமா என்ற கேள்விக்கு ஏன் முடியாது என்று பதில் கேள்வி கேட்டுள்ளார் ஹேல்ஸ்.

நிச்சயம் முடியும்

நிச்சயம் முடியும்

இதுகுறித்து அவர் கூறுகையில், நிச்சயம் முடியும். இங்கிலாந்து அணி திறமையான அணி. நிறைய அனுவபம் உடைய அணி. இளம் வீரர்கள், திறமையானவர்கள் நிரம்பிய அணி.

பேட்டிங் - பவுலிங்

பேட்டிங் - பவுலிங்

பேட்டிங் மட்டுமல்லாமல் பந்து வீச்சிலும் திறமையானவர்கள் இங்கு உள்ளனர். பயர்பவர் உள்ள அணி. எனவே நிச்சயம் எங்களாலும் வெல்ல முடியும். வெல்லும் தகுதி படைத்ததுதான் இங்கிலாந்து அணி என்றார் அவர்.

Story first published: Tuesday, February 16, 2016, 18:01 [IST]
Other articles published on Feb 16, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+