Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வரிசையாக 3 விக்கெட்.."பெண் கிரிக்கெட்டரை" நினைவுபடுத்திய இங்கிலாந்து.. இந்தியாவை காலி செய்த வியூகம்

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி வரிசையாக 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா வரிசையாக விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி அளித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி தற்போது 270 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணி சார்பாக கோலி, அக்சர் பட்டேல் ஆகியோர் பேட்டிங் செய்து வருகிறார்கள். இந்திய அணி 350 ரன்களை இங்கிலாந்துக்கு டார்கெட்டாக வைக்க திட்டமிட்டு ஆடி வருகிறது.

 இன்று ஆட்டம்

இன்று ஆட்டம்

இன்று ஆட்டம் தொடங்கியதில் இருந்து வரிசையாக இந்திய அணி விக்கெட்டுகளை இழந்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் செய்தாலும் தேவையின்றி கிரீஸுக்கு வெளியே வந்து விக்கெட்டுகளை இழந்தனர். ரோஹித், புஜாரா, பண்ட் ஆகிய மூன்று பேருமே ஒரே மாதிரி அவுட் ஆனார்கள்.

 விக்கெட்

விக்கெட்

முக்கியமாக நீ கிரீசுக்கு வெளியே சென்றாலே அவுட் செய்துவிடுவேன் என்று பென் போக்ஸ் கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தார். ரோஹித், பண்ட் இரண்டு பேருமே இப்படித்தான் அவுட் ஆனார்கள். புஜாரா வெளியே ஓடிவிட்டு, கையில் இருந்து பேட்டை நழுவவிட்டுவிட்டு தேவையின்றி அவுட் ஆனார்.

கீப்பர்

கீப்பர்

இப்படி வரிசையாக விக்கெட் விழ பென் போக்சின் சிறப்பான விக்கெட் கீப்பிங் ஒரு காரணம் ஆகும். ஸ்டம்பிற்கு பின் மிகவும் கவனமாக நின்று வரிசையாக விக்கெட்டுகளை எடுத்தார். அதிலும் பண்டை விக்கெட் எடுக்க ஸ்டம்பிட் செய்ய வேண்டும் என்றே திட்டம் வகுத்தனர்.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

பந்தை வெளியே வீசி, பண்டை வெளியே வர வைத்து அவரை ஸ்டம்பிட் செய்தனர். இதை பண்ட் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இன்று போக்ஸ் கீப்பிங் செய்த விதம் அப்படியே இங்கிலாந்து பெண் கிரிக்கெட் வீராங்கனை சாரா டெய்லரை நினைவு படுத்தியது. கிரிக்கெட் உலகில் மிக சிறந்த கீப்பர்களில் ஒருவர் சாரா டெய்லர்.

ஆடம் கில்கிறிஸ்ட்

ஆடம் கில்கிறிஸ்ட்

ஆடம் கில்கிறிஸ்ட், தோனி, சாரா டெய்லர் ஆகிய மூன்று பேர் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர்களாக இருந்தனர். அந்த லிஸ்டில் தற்போது போக்ஸ் இணைவதற்கான அறிகுறிகள் தென்படுகிறது. இவரின் பேட்டிங் மட்டும் கொஞ்சம் முன்னேறினால் இங்கிலாந்து அணியில் இவர் நிரந்தர இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.

Story first published: Monday, February 15, 2021, 12:17 [IST]
Other articles published on Feb 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+