நான்காவது டெஸ்ட்.மூன்றாம் நாள்.இங்கிலாந்து 233 ரன்கள் முன்னிலை..டாப் 5 நிகழ்வுகள்
சௌதாம்ப்டன் : இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி சௌதாம்ப்டனில் நடைபெற்று வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதனை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 273 ரன்களை குவித்து முதல் இன்னிங்சில் 27 ரன்கள் முன்னிலை பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து மூன்றாம் நாள் முடிவில் மூன்றாம் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்களை எடுத்து 233 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
மூன்றாம் நாள் ஆட்டத்தின் டாப் 5 நிகழ்வுகள்
1 ஜோ ரூட்டின் பொறுப்பான ஆட்டம்
இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் நேற்று நான்காவது வீரராக களமிறங்கினார். அவர் தொடக்க ஆட்டக்காரர் ஜென்னிங்ஸ் உடன் இணைந்து 60 ரன்களை சேர்த்தார். பொறுப்பாக விளையாடிய ரூட் 48 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
2 ஷமியின் சிறப்பான பந்துவீச்சு
இந்திய வீரர் முகமது ஷமி நேற்று சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஆட்டத்தின் கடைசி பந்தில் அவர் ரஷீத் விக்கெட்டை வீழ்த்தினார். மேலும் அவர் தனது சிறப்பான பீல்டிங்கின் முலம் இங்கிலாந்து கேப்டன் ரூட்டின் விக்கெட்டை ரன் அவுட் செய்தார்.
3 அரை சதம் அடித்த பட்லர்
இங்கிலாந்து அணி வீரர் பட்லர் மீண்டுமொரு முறை தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். அவர் 69 ரன்களில் ஆட்டமிழந்தார். டெஸ்ட் போட்டிகளில் அவர் அடிக்கும் 9 ஆவது அரைசதம் இதுவாகும்.
4 களத்தில் இருக்கும் கர்ரன்
இங்கிலாந்து அணியின் இளம் ஆல் ரௌண்டர் சாம் கர்ரன் 37 ரன்களுடன் களத்தில் உள்ளார். முதல் இன்னிங்சில் அவர் அரைசதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.அவர் நான்காம் நாள் ஆட்டத்தில் விரைவாக ரன்களை குவிக்கும் பட்சத்தில் இந்திய அணிக்கான வெற்றி இலக்கு இன்னும் அதிகமாக நிர்ணயிக்கப்படும்.
5 233 ரன்கள் முன்னிலை
இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் முடிவில் 233 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. சௌதாம்ப்டன் ஆடுகளத்தில் 200 ரன்களுக்கு மேல் நான்காவது இன்னிங்சில் எடுப்பது சற்று கடினமே.
Story first published: Sunday, September 2, 2018, 9:56 [IST]
Other articles published on Sep 2, 2018


Click it and Unblock the Notifications