Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2வது இன்னிங்ஸ்... இந்தியா சிறப்பான துவக்கம்... ரோரி பர்ன்ஸ் டக் -அவுட்!

சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கியுள்ளது.

இங்கிலாந்து துவக்க வீரர் ரோரி பர்ன்ஸ் முதல் பந்திலேயே டக்-அவுட் ஆகியுள்ளார். அஸ்வின் பௌலிங்கில் ரஹானே அவரது கேட்சை பிடித்துள்ளார்.

இந்தியா முதல் இன்னிங்சில் 337 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆன நிலையில் இங்கிலாந்து பாலோ ஆன் கொடுக்காமல் இரண்டாவது இன்னிங்சை துவங்கியுளளது.

இரண்டாவது இன்னிங்ஸ்

இரண்டாவது இன்னிங்ஸ்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கியுள்ளது. இதில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து துவக்க வீரர் ரோரி பர்ன்ஸ் முதல் பந்திலேயே ரவி அஸ்வின் பௌலிங்கில் ரஹானே கேட்சில் அவுட்டானார். தற்போது உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது.

337 ரன்களுக்கு ஆல்-அவுட்

337 ரன்களுக்கு ஆல்-அவுட்

முன்னதாக இன்றைய தினம் தனது முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணி, 337 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்சை முடித்துள்ளது. தொடர்ந்து பாலோ ஆன் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்துள்ளது.

முக்கிய விக்கெட் அவுட்

முக்கிய விக்கெட் அவுட்

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 578 ரன்களை குவித்த நிலையில், தற்போது இரண்டாவது இன்னிங்சின் முதல் பந்திலேயே முதல் முக்கிய விக்கெட் விழுந்துள்ளது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்ற பௌலிங்கை அஸ்வினும் தொடர்ந்து பும்ராவும் வெளிப்படுத்தினால் இந்த போட்டியில் வெற்றி அல்லது டிரா ஏற்பட வழி ஏற்படும்.

13ம் தேதி துவக்கம்

13ம் தேதி துவக்கம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையில் இரண்டாவது போட்டி வரும் 13ம் தேதி துவங்கவுள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் ஆன்லைனில் துவங்கியுள்ளது. ஏறக்குறைய ஒரு ஆண்டு கழித்து ரசிகர்கள் மைதானத்தில் சென்று போட்டியை கண்டு களிக்கவுள்ளனர்.

Story first published: Monday, February 8, 2021, 12:27 [IST]
Other articles published on Feb 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+