For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலியை பார்த்தால் பாவமாக இருக்கு.. வேணும்னா அட்வைஸ் சொல்லவா.. இங்கிலாந்து ஜாம்பவான் பேச்சு

எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ரன் குவிக்க முடியாமல் தவித்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே.

Recommended Video

Indian Team-க்கு 8th Captain! Kohli முதல் Dhawan வரை | Aanee's Appeal | *Cricket

பயிற்சி ஆட்டத்தில் அரைசதம் எடுத்த விராட் கோலி, இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஐந்தாவது டெஸ்டில் கூட இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து விராட் கோலி 31 ரன்கள் மட்டும் தான் அடித்து இருந்தார்.

தொடர்ந்து விராட் கோலி சொதப்பி வருவதால் தற்போது அணியில் அவருடைய இடத்திற்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது. சீனியர் வீரர்களின் செயல்பாடுகளை மறு ஆய்வு செய்து வருவதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும், தேர்வு குழுவும் அண்மையில் கூறியிருந்தது .

ரோகித், கோலி, பும்ராவுக்கு நாடு முக்கியம் கிடையாதா? தொடர்ந்து ஓய்வு வழங்குவது ஏன்? ரசிகர்கள் கேள்விரோகித், கோலி, பும்ராவுக்கு நாடு முக்கியம் கிடையாதா? தொடர்ந்து ஓய்வு வழங்குவது ஏன்? ரசிகர்கள் கேள்வி

கோலிக்கு சிக்கல்

கோலிக்கு சிக்கல்

இது விராட் கோலிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த கேப்டன் என்ற நிலையில் இருந்த ரஹானேவையே ரன் அடிக்கவில்லை என்று கூறி, பிசிசிஐ தற்போது அணியிலிருந்து நீக்கிவிட்டது. இதனால் அந்த நிலை விராட் கோலிக்கு மிக விரைவில் ஏற்பட அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டி20 ஒருநாள் தொடரில் விராட் கோலி சிறப்பாக விளையாட வேண்டிய நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளார் .

ஜெஃப்ரி பாய்காட் கருத்து

ஜெஃப்ரி பாய்காட் கருத்து

இதனிடையே விராட் கோலி போன்ற பெரிய வீரர் ரன் குவிக்க முடியாமல் திணறுவதை பார்க்கும் போது பாவமாக இருப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜெஃப்ரி பாய்காட் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் விராட் கோலி முதலில் இன்னிங்ஸில் அவுட் ஆன விதத்திற்கு காரணம், அவர் ஷாட்டை ஆடலாமா வேண்டாமா என்று இரு மனதில் இருந்தது தான் என்று அவர் கூறியுள்ளார்.

தவறுகளை குறையுங்கள்

தவறுகளை குறையுங்கள்

போட்டியில் ஆடும் போது எப்படி ஷார்ட்களை ஆட வேண்டும் என்று மனதில் தெளிவாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள ஜெஃப்ரி பாய்காட், விராட் கோலி ரன் அடிக்கும் விதத்தில் பிரச்சனை இருப்பதாக கூறியுள்ளார். விராட் கோலி மேற்கொள்ளும் தவறுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். போட்டியில் கூடுதல் கவனம் செலுத்தி அவருடைய விக்கெட்டை பெரிதாக நினைக்க வேண்டும் என்று ஜெஃப்ரி பாய்காட் கூறியுள்ளார்.

அட்வைஸ்

அட்வைஸ்

விராட் கோலி ஆட்டத்தில் கூடுதல் கவனத்தை செலுத்த தொடங்கும் போது அவர் செய்யும் தவறுகள் குறைய தொடங்கும் விராட் கோலி பெரிய ஸ்டோரை அடிக்க வேண்டும் என்று நினைக்க கூடாது. அதற்கு பதில் அவருடைய இலக்கு சிறியதாக இருக்க வேண்டும் நிறைய சிங்கிள்களை அவர் ஆட வேண்டும். சிங்கிள்கள் எடுக்கும் போது அவருக்கு நம்பிக்கை ஏற்படும் கிரிக்கெட் ஒரு அறிவு சார்ந்த போட்டி விராட் கோலி மீண்டு வருவார் என நம்புகிறேன்.

Story first published: Wednesday, July 6, 2022, 23:53 [IST]
Other articles published on Jul 6, 2022
English summary
England legend Geoffrey boycott feels pity for virat kohli and advices to score runsவிராட் கோலியை பார்த்தால் பாவமாக இருக்கு.. வேணும்னா அட்வைஸ் சொல்லவா.. இங்கிலாந்து ஜாம்பவான் பேச்சு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X