Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆண்களுக்கும் அழுகை வரும்.. தன் நண்பருக்காக கண்ணீர் விட்டு அழுத ஆண்டர்சன்.. மனதை உருக்கிய வீடியோ

லண்டன் : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆண்டர்சனும், பிராடும் ஒன்றாக இணைந்து பந்துவீசுவது இன்று தான் கடைசி என்ற செய்தி கிரிக்கெட் ரசிகர்கள் மனதை நெருடுகிறது. பேட்ஸ்மேன்களின் பார்ட்னர்ஷிப் கேள்விப்பட்டு இருப்போம்.

ஆனால் பவுலிங்கில் பார்ட்னர்ஷிப் போட்டு எதிரணி வீரர்களின் விக்கெட்டை வேட்டையாடியது என்றால், அது ஆண்டர்சன், பிராட் ஜோடி தான். சர்வதேச கிரிக்கெட்டில் இருவரும் எடுத்த விக்கெட்டுகளை இணைத்தால், அது 1200 ஐ தாண்டும்.

கடந்த 15 ஆண்டுகளாக ஆண்டர்சனும், பிராடும் இணைந்து 138 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகளை பார்ட்னர்ஷிப் போட்டு எடுத்து இருக்கிறார்கள். இதில் இருவரும் இணைந்து 46 முறை 5 விக்கெட்டுகளையும், 6 முறை 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளனர்.

England legend James anderson in tears after Staurt broad retirement

இந்த நிலையில், பிராட் ஓய்வு பெறுவதால், இனி ஆண்டர்சன் தனி ஆளாக தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட உள்ளார். இது குறித்து ஆண்டர்சனிடம் கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு பதில் சொல்ல முடியாமல் ஆண்டர்சன் கண்ணீர் விட்டு அழுதார். தாம் பிராட் பற்றி பேச வேண்டும் என்று மூளை நினைக்க, அதற்கு அவருடைய சோகம் இடம் கொடுக்கவில்லை.

இது குறித்து பேசிய ஆண்டர்சன், பிராட் என்னுடைய சிறந்த நண்பர். அவர் பல வருடங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் எப்போதுமே எனக்காக உறுதுணையாக இருந்திருகிறார் என்று கூறி கொண்டே அழுகையை அடக்க முடியாமல் ஆண்டர்சன் பேசாமல் சென்றுவிட்டார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஆண்களும் அழுவார்கள். தங்களுடைய நண்பர்களுக்காக என்று பதிவிட்டு இருக்கிறார்கள். இதே போன்று பிராட் இன்னும் 2 ஆண்டுகள் விளையாடி இருந்தால், முரளிதரன் அல்லது குறைந்தபட்சம் ஆண்டர்சன் சாதனையாவது முறியடித்து இருப்பார் என்றும், ஆனால், ஆண்டர்சனின் சாதனையை முறியடிக்க கூடாது என்பதற்காக பிராட் இப்படி செய்து இருக்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Monday, July 31, 2023, 13:19 [IST]
Other articles published on Jul 31, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+