For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ENG vs NZ: ஒரே டெஸ்ட் போட்டி.. 6 "பகீர்" மாற்றங்கள்.. அத்தனைக்கும் காரணம் WTC பைனல்

எட்ஜ்பேஸ்டன்: இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கிய நிலையில், முதல் செஷனில் இங்கிலாந்தின் கை ஓங்கியுள்ளது.

இவ்விரு அணிகளுக்கு இடையே லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது போட்டி இன்று (ஜூன்.10) தொடங்கியது.

காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் போட்டியில் இருந்து விலகியுள்ள நிலையில், டாம் லாதம் கேப்டனாக செயல்படுகிறார். அதேபோல், அந்த அணியில் 6 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. வில் யங், டாம் பிளன்டல், டேரில் மிட்சல், அஜஸ் படேல், மேட் ஹென்றி ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

67 ரன்கள்

67 ரன்கள்

இந்த நிலையில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்ளே களமிறங்கினர். 29 ஓவர்கள் ஆகியும், நியூசிலாந்து பவுலர்களால் இதுவரை ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியவில்லை. ரோரி பர்ன்ஸ் 96 பந்துகளில் 32 ரன்களும், டோமினிக் சிப்ளே 79 பந்துகளில் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். உணவு இடைவேளை வரை அந்த அணி 67 ரன்கள் எடுத்துள்ளது.

நோ அச்சுறுத்தல்

நோ அச்சுறுத்தல்

இந்திய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு என பாதுகாத்து வைக்கப்பட்டு, முதல் டெஸ்டில் ஆடாமல் இருந்த டிரெண்ட் போல்ட், இப்போட்டியில் களமிறங்கியுள்ளார். அவர் 9 ஓவர்கள் வீசி 18 ரன்கள் கொடுத்துள்ளார். ஆனால், விக்கெட் ஏதும் விழவில்லை. பெரிதாக அவரால் எந்த அச்சுறுத்தலும் ஏற்படுத்த முடியவில்லை.

பாதி அணி மாற்றம்

பாதி அணி மாற்றம்

அதுமட்டுமின்றி, ஒரே போட்டியில் ஆறு வீரர்களை நியூசிலாந்து மாற்றியிருப்பதற்கு முக்கிய காரணமும் உள்ளது. அதாவது, டாப் பிளேயர்களை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக பாதுகாக்கவே, அவர்களுக்கு ஓய்வு கொடுத்து, மாற்று வீரர்களை அணியில் சேர்த்திருப்பதாக கூறப்படுகிறது. எப்படியாவது இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற வேண்டும் என்பதே நியூசிலாந்தின் ஒரே டார்கெட்.

அணியில் இருந்து நீக்கம்

அணியில் இருந்து நீக்கம்

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மற்றொரு மிக முக்கிய தகவல், ஓலே ராபின்சன் அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது தான். அறிமுகமான முதல் போட்டியிலேயே 7 விக்கெட்டுகளை, 42 ரன்களும் எடுத்து தன்னை ஒரு வேல்யூவான ஆல் ரவுண்டராக நிரூபித்தவர் ராபின்சன். ஆனால், 8 வருடங்களை முன்பு அவர் செக்ஸ் மாற்றியும், இனவெறி குறித்தும் சர்ச்சையாக பதிவிட்ட ட்வீட் காரணமாக, தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தடை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, June 10, 2021, 19:01 [IST]
Other articles published on Jun 10, 2021
English summary
eng vs nz 2nd test edgbaston - இங்கிலாந்து vs நியூசிலாந்து
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+