Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மொத்தமாக அதிர்ந்த மைதானம்.. இந்திய அணி களமிறக்கிய "அந்த" அஸ்திரம்.. சரிந்த இங்கிலாந்து அஸ்திவாரம்!

அகமதாபாத்: இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அகமதாபாத் மைதானத்தில் பிங்க் பால் போட்டியாக இந்த ஆட்டம் நடக்கிறது.

இதுவரை நடந்துள்ள ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டை இழந்து 34 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

எப்படி

எப்படி

இந்த போட்டி பிங்க் பால் ஆட்டம் என்பதால் இதில் எப்படி ஆடுவது என்று தெரியாமல் இரண்டு அணிகளும் குழம்பி வருகிறது. இந்தியா இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளும் பிங்க் பந்தில் அவ்வளவு நன்றாக ஆட கூடிய அணிகள் கிடையாது. இங்கிலாந்தும் நியூசிலாந்துக்கு எதிராக பிங்க் பாலில் சொதப்பியது குறிப்பிடத்தக்கது.

ஆட்டம்

ஆட்டம்

இதனால் இன்று பேட்டிங் இறங்கியதில் இருந்தே இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய முடியாமல் திணறியது. பிங்க் பால் அதிகமாக பவுன்ஸ் ஆனதால் எப்படி ஆடுவது என்று தெரியாமல் இங்கிலாந்து அணி திணறியது. அதிலும் அக்சர் பட்டேல், இஷாந்த் சர்மா இரண்டு பேருமே இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுத்தனர்.

 இந்திய அணி

இந்திய அணி

இதனால் இஷாந்த் ஓவரில் சிப்லியும், அக்சர் ஓவரில் பிரைஸ்டாவும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். பந்து லேசாக ரிவர்ஸ் ஸ்விங் ஆனதால் சிப்லி அவுட் ஆனார். அதேபோல் இன்னொரு பக்கம் பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு ஒத்துழைப்பு கொடுத்தது. இதனால் அக்சரும் எளிதாக பவுலிங் செய்தார்.

கணிக்க முடியாது

கணிக்க முடியாது

பிட்ச் கணிக்க முடியாத அளவிற்கு பவுன்ஸ் ஆகிக் கொண்டு இருக்கிறது. இதை பயன்படுத்தி தற்போது இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து வருகிறது. முதல் நாளே பிட்ச் இப்படி இருப்பதால் இந்திய அணி பேட்டிங் செய்யும் போது கடுமையாக திணறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, February 24, 2021, 16:20 [IST]
Other articles published on Feb 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+