ஒரே ஆண்டில் 2வது முறையாக ஒரே செஷனில் அனைத்து விக்கெட்களையும் இழந்த இங்கிலாந்து!
ட்ரெண்ட்பிரிட்ஜ் : இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ட்ரெண்ட்பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 161 ரன்களை எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 168 ரன்கள் முன்னிலை பெற்றது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் ஒரு மோசமான சாதனையை படைத்தது. அதாவது அந்த அணியின் அனைத்து விக்கெட்களும் ஒரே செஷனில் விழுந்தது குறிப்பிடத்தக்கது.
முதல் இன்னிங்ஸ்யை ஆட தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் 40 நிமிடங்களில் விக்கெட் இழக்கவில்லை. உணவு இடைவேளை முடிந்த பின்னர் நடைபெற்ற இரண்டாவது செஷனில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய வீரர் பாண்டியா 29 பந்துகளில் 5 விக்கெட் வீழ்த்தியதே இங்கிலாந்து அணியின் வீழ்ச்சிக்கு காரணமாகும்.
இதே போன்றதோரு நிகழ்வு இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து அணிக்கு நியூஸிலாந்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஆக்லாண்டில் நடைபெற்ற அப்போட்டியில் இங்கிலாந்து அணி 58 ரன்களுக்கு அனைத்து விக்கட்களையும் இழந்தது. மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கெதிராகவும் இது போன்றதொரு பின்னைடைவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணி தனது சொந்த மண்ணில் இவ்வாறு ஆட்டமிழந்தது 80 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Story first published: Tuesday, August 21, 2018, 11:10 [IST]
Other articles published on Aug 21, 2018


Click it and Unblock the Notifications