
கடைசி 6 ஓவர்கள்
15வது ஓவர் வரை விக்கெட் விழவில்லை. 43வது ஓவர் வரை 3 விக்கெட் மட்டுமே இழந்த பாகிஸ்தான் அபாரமாக ஆடி 279 ரன்கள் அடித்திருந்தது. அதன் பிறகு கடைசி ஆறு ஓவரில்தான் 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. ஆனாலும் ரன்கள் எடுக்கத் தவறவில்லை.

அதிகபட்சமாக 348 ரன்கள்
இறுதியில் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் என்ற இமாலய ரன்களை எட்டியது. பாகிஸ்தான். மொயின் அலியும் க்ரிஸ் வோக்குஸும் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். 349 ரன்கள் என்பது மிகப்பெரிய இலக்கு.

பெயர்ஸ்டோவ் அவுட்
ஆனால் சொந்த மண் என்பதால் இங்கிலாந்து தெம்புடன் களம் இறங்கியது. 3வது ஓவரிலேயே ஜேசன் ராயைப் பறிகொடுத்தது. அடுத்து பெயர்ஸ்ட்ரோவுடன் கூட்டணி சேர்ந்த ரூட் நன்றாக ஆட தொடங்கிய நிலையில், 9வது ஓவரில் பெயர்ஸ்டோவ் அவுட்.

மாறியது நிலைமை
பின்னர் களமிறங்கிய கேப்டன் மார்கன் 9 ரன்களிலும், ஸ்டோக்ஸ் 13 ரன்களிலும் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். வெற்றி பாகிஸ்தான் வசம் என்று எல்லோரும் நினைக்கத் துவங்க... நிலைமை அப்படியே மாறியது. ரூட்டும் அதன்பிறகு வந்த பட்லரும் ரன்களைக் குவிக்க தொடங்கினர்.

இருவர் சதம்
ரூட் 104 பந்துகளிலும் பட்லர் 76 பந்துகளிலும் சதமடித்து அசத்தினர். கடைசியில் 34 பந்துகளில் 61 ரன்கள் என்று 20 ஓவர் மேட்ச் கணக்காய் பரபரப்பு தொற்றியது. அப்போது தான் அந்த டுவிஸ்ட் நடந்தது. எதிர்பாராத விதமாக பட்லர் அவுட்டானார்.

இங்கி. தோல்வி
அதன்பிறகு வந்த வீரர்கள் வெற்றிக்காக போராடினாலும் விக்கெட் விழுவதை அவர்களால் தடுக்க முடியவில்லை. இறுதியில் 9 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்து 14 ரன்களில் வெற்றியை இழந்தது இங்கிலாந்து. ஆட்ட நாயகன் விருது பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் மொஹமத் ஹபீசுக்கு அளிக்கப்பட்டது.

சாதனை படைத்த இங்கி.
கிட்டத்தட்ட வெற்றிக்கு இங்கிலாந்துக்கு என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி கட்டத்தில் நிலைமை அப்படியே மாறி போனது. இந்த போட்டியில் தோற்ற போதும் இங்கிலாந்து இதுவரை எந்த அணியும் செய்யாத சாதனையை செய்திருக்கிறது.

தோல்வியில் இது புதுசு
பொதுவாக, களத்தில் அற்புதமாக நின்று, சதம் அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்வது ஒரு ரகம். அந்த டிரெண்டை ஒரு தோல்வியின் வழியே மாற்றி காட்டியிருக்கிறது இங்கிலாந்து. நேற்றைய போட்டியில் ஒருவர் அல்ல...இருவர் சதம் அடித்து தோற்றிருக்கிறது இங்கிலாந்து.

புதிய வரலாறு
கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இது ஒரு புதிய சாதனை. எப்படி என்கிறீர்களா..? அதாவது, 2 சதம் அடிக்கப்பட்ட அணி தோற்று போனது, அணியில் எந்த சதத்தையும் அடிக்காமல், அதிக ரன்கள் எடுத்து வெற்றி பெறுவது. இந்த முடிவு தான் நேற்றைய போட்டியில் நிகழ்ந்திருக்கிறது. கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இது ஒரு வகை சாதனையாகும். ஆக 2 சதம் அடித்தும் தோற்று, சாதனை படைத்திருக்கிறது இங்கிலாந்து.


Click it and Unblock the Notifications











