Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த முறை இவங்களுக்கு தான் ஆஷஸ் கோப்பை… கணிப்பை வெளியிட்ட அந்த ஜாம்பவான்.. குஷியில் ரசிகர்கள்

போர்ட் ஆப் ஸ்பெயின்: ஆஷஸ் தொடரை இந்த முறை உலக சாம்பியன் இங்கிலாந்து தான் வெல்லும் என்று ஜாம்பவான் பிரைய்ன் லாரா கணிப்பு தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பழமையான மற்றும் பாரம்பரியமான ஆஷஸ் தொடர் தொடங்கி இருக்கிறது. 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதல் போட்டி பர்மிங்காமில் நடந்துவருகிறது.

England may pick ashes series 2019 says brain lara

போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 284 ரன்கள் அடித்து ஆல் அவுட்டானது. இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆடிவருகிறது. இந் நிலையில், இந்த ஆஷஸ் தொடரின் முடிவு, அதிக ரன்கள் அடிக்கப்போவது யார், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தப்போவது யார் ஆகிய கணிப்புகளை தெரிவித்துள்ளார் ஜாம்பவான் பிரெய்ன் லாரா.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது: இங்கிலாந்து அணி தான் ஆஷஸ் தொடரை வெல்லும். ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அதிக ரன்களை குவிப்பார்.

அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக வோக்ஸ் திகழ்வார் என்றும் கூறி உள்ளார். அணிகளின் தற்போதைய திறன்,வீரர்களின் செயல்பாடுகள் ஆகியற்றின் அடிப்படையில் அவர் இந்த கணிப்பை வெளியிட்டுள்ளார். அவரின் கணிப்பால் இங்கிலாந்து வீரர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Story first published: Friday, August 2, 2019, 20:10 [IST]
Other articles published on Aug 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+