Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோற்றால் கவுரவமாக ஒப்புக்கொள்ளனும்.. இப்படி அழுகுனி ஆட்டம் கூடாது.. இங்கிலாந்துக்கு சேவாக் 'நறுக்'

டெல்லி: பந்தை சேதப்படுத்தியதாக இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோஹ்லி மீது கூறிய புகாரை மறுத்துள்ள முன்னாள் வீரர் விரேந்திர சேவாக், பிரிட்டிஷ் மீடியா மீது சாடியுள்ளார்.

விசாகபட்டினத்தில் முடிவடைந்த இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் பிரிட்டனை சேர்ந்த ஊடகம் ஒன்றில், விராட் கோஹ்லி, பந்தை சேதப்படுத்தியதாக ஒரு வீடியோ வெளியானது.

இந்த பிரச்சினையில் விராட் கோஹ்லி எந்த ஒரு நடவடிக்கையுமின்றி தப்பிவிட்டார். இதுகுறித்து ஆங்கில பத்திரிகையொன்றுக்கு சேவாக் அளித்த பேட்டியில் பிரிட்டிஷ் மீடியாவை சாடியுள்ளார்.

தோல்வியை ஒப்புக்கொள்ளுங்கடே

தோல்வியை ஒப்புக்கொள்ளுங்கடே

தோல்வியை சந்திக்கும் அணி, ஏதாவது ஒரு பிரச்சினையை கிளப்புவது அடிக்கடி நடக்கிறது. இம்முறை, இங்கிலாந்து அணி அந்த பிரச்சினையை கிளப்பாமல் இருக்கலாம், ஆனால், இங்கிலாந்து மீடியா கிளப்பியுள்ளது. என்னை பொறுத்தளவில், ஒரு அணி தனது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டியது அவசியம்.

நாங்கள் எப்படி இருந்தோம்

நாங்கள் எப்படி இருந்தோம்

திறந்த மனதோடு, தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும். இந்திய அணி வெளிநாடுகளில் தோற்றபோதெல்லாம் அதற்கு காரணங்களை தேடியதில்லை. நாங்கள் நன்றாக ஆடவில்லை என்பதாலேயே தோல்வியடைந்தோம் என ஒப்புக்கொண்டுள்ளோம்.

சுயிங்கத்தால் பிரச்சினை

சுயிங்கத்தால் பிரச்சினை

சுயிங்கம் சாப்பிட்டதும், அந்த உமிழ் நீரை பயன்படுத்தி பந்தை விராட் கோஹ்லி சேதப்படுத்தியதாக கூறி பிரிட்டீஷ் மீடியா வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், மைதானத்திற்குள், சாக்லேட், சுயிங்கம் சாப்பிட வீரர்களுக்கு அனுமதி வழங்கியுள்ள ஐசிசி, அதெப்படி சுயிங்கம் மென்ற உமிழ்நீரால்தான் பந்து சேதமானது என்ற முடிவுக்கு வர முடிகிறது என்பது சர்ச்சைக்குறியது என்றும் சேவாக் கூறியுள்ளார்.

ஃபாப் டுப்ளசிஸ்

ஃபாப் டுப்ளசிஸ்

இதேபோல ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடும் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஃபாப் டுப்ளசிஸ் உமிழ் நீரால் பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. அவருக்கு முழு ஊதியமும் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும், தங்களது தோல்விகளை மறைக்க எதிரணியின் முக்கிய வீர்களை மனதளவில் பாதிக்கச் செய்யும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து 'மைன்ட் கேம்' ஆடுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, November 25, 2016, 10:58 [IST]
Other articles published on Nov 25, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+