For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

27 ஆண்டுகள்...! உலக கோப்பையில் இந்தியாவை ஜெயிக்காத இங்கிலாந்து... வரலாறு இன்று மாறுமா?

எக்பாஸ்டன்: உலக கோப்பையில் இந்தியாவை 27 ஆண்டுகளாக வெல்ல முடியாமல் இருக்கும் இங்கிலாந்து கட்டாய வெற்றியோடு இன்று களமிறங்குகிறது.

உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேற எக்பாஸ்டனில் இந்தியாவுக்கு எதிரான போட்டி, இங்கிலாந்து அணிக்கு இது வாழ்வா, சாவா போராட்டம். அடுத்து நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டமும் இங்கிலாந்துக்கு முக்கியமான ஆட்டம். இரண்டில் ஒன்றில் தோற்றாலும் அரையிறுதிக்கு செல்வதில் இங்கிலாந்துக்கு சிக்கல் தான்.

இந்திய அணியை, 1992ம்ஆண்டு உலக கோப்பையில் வென்ற இங்கிலாந்து, அதன் பிறகு நடந்த 1999, 2003, 2011, 2015ம் ஆண்டு உலக கோப்பைகளில் வெல்ல முடியவில்லை. 2015ம் ஆண்டு போட்டி சமனில் முடிந்தது. கிட்டத்தட்ட 27 ஆண்டுகளாக இந்திய அணியை வெல்ல முடியாமல் இங்கிலாந்து போராடி வருகிறது.

7வது இடத்தில் ரோகித்

7வது இடத்தில் ரோகித்

இந்திய அணியில் தவானுக்கு பதிலாக சேர்க்கப்பட்ட ராகுல் ரன்களை குவித்தாலும் விக்கெட்டை இழந்துவிடுகிறார். உலக கோப்பையில் அதிக ரன்கள் சேர்த்தவர்கள் வரிசையில் 7வது இடத்தில் உள்ளார் ரோகித் . இருவரும் கை கோர்த்தால் இந்தியாவின் ஸ்கோர் அதிகரிக்கும்.

சொதப்பும் மிடில் ஆர்டர்

சொதப்பும் மிடில் ஆர்டர்

இங்கிலாந்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக கோலி இருப்பார். வழக்கம் போலவே, இந்தியாவின் சொதப்பல் மிடில் ஆர்டர் தான். விஜய் சங்கருக்கு 3 போட்டிகளில் வாய்ப்பு அளித்தும் சோபிக்கவில்லை. இன்றைய ஆட்டத்தில் அவர் சேர்க்கப்படுகிறரா என்று தெரிய வில்லை.

ரன்கள் தான் வேண்டும்

ரன்கள் தான் வேண்டும்

இங்கிலாந்து மண்ணில் நல்ல விக்கெட் எடுக்கும் திறமை படைத்த ஜடேஜா வந்தால் அணிக்கு நல்லது. கேதர் ஜாதவ் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மட்டும் ஒரு சதம் அடித்துள்ளார். அதே அணியுடன் மந்தரக ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி ரன் குவிப்பில் இறங்க வேண்டும்.

4வது வரிசையில் பாண்டியா

4வது வரிசையில் பாண்டியா

ஹர்திக் பாண்டியாவை 4வது வீரராக களமிறக்கலாம்.புவனேஸ்வர் குமாருக்கு பதில், ஷமி வர வாய்ப்புகள் உள்ளன. பும்ராவின் பந்துவீச்சு இந்திய அணிக்கு அசாத்திய பலம். எக்பாஸ்டன் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகம் என்பதால் சாஹலுக்கு வாய்ப்பு உண்டு.

பேட்டிங் வரிசை

பேட்டிங் வரிசை

இங்கிலாந்து வழக்கமான அதிரடி பேட்டிங் மூட்டை கட்டி வைத்துள்ளதால் தடுமாறுகிறது. அதிரடி பேட்ஸ்மேன் ஜேசன் ராய் காயத்தால் இல்லாதது அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. இன்றைய ஆட்டத்தில் அவர் களமிறங்கவாய்ப்பு இருப்பது பலம். ஜோ ரூட், மோர்கன், பெயர்ஸ்டோ, பட்லர் என வலுவான பேட்டிங் வரிசை இருக்கிறது.

பவுலிங் எப்படி?

பவுலிங் எப்படி?

எந்த இங்கிலாந்து வீரரையும் நீண்ட நேரம் களத்தில் நிற்கவிடாமல் இந்தியா விளையாட வேண்டும். சுழற் பந்துவீச்சில் ரஷித்துக்கும், மொயின் அலிக்கும் வாய்ப்பு அளிக்கப்படலாம். வேகப்பந்துவீச்சில் ஸ்டோக்ஸ், மார்க் உட், பிளங்கெட், ஆர்ச்சர் என ஒரு பட்டாளமே இங்கிலாந்துக்கு சாதகம். எது எப்படி இருப்பினும், இங்கிலாந்துக்கு அதிக அழுத்தம் தரும் போட்டி என்பதால் எளிதாக இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Sunday, June 30, 2019, 8:07 [IST]
Other articles published on Jun 30, 2019
English summary
England meet India today on crucial match in world cup series.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+