Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காயத்தில் இருந்து மீண்ட மிடில் ஆர்டர் ஸ்பெசலிஸ்ட்..சைலண்டாக செக் வைக்க காத்திருக்கும் இங்கிலாந்து!

சென்னை: இங்கிலாந்தின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆலிவ் போப் காயத்தில் இருந்து குணமடைந்துள்ளது, ரூட்& கோவுக்கு கொஞ்சம் பலம் சேர்த்துள்ளது.

ஆலிவ் போப் 2 நாட்களாக சக வீரர்களுடன் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் முதல் டெஸ்ட்டில் அவர் களமிறங்குவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

சொந்த மண் என்பது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக இருந்தாலும், சைலண்டாக இருக்கும் இங்கிலாந்திடம் மெத்தனமாக இருந்து விட கூடாது என்றும் கருத்துக்கள் உலா வருகின்றன.

தமிழக மண்ணில் டெஸ்ட்

தமிழக மண்ணில் டெஸ்ட்

இதோ இங்கிலாந்து டெஸ்ட் தொடர் பக்கத்தில் விட்டது. ஆஸ்திரிலேயாவை சொந்த மண்ணில் வீழ்த்திய கையோடு தமிழக மண்ணில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா. கங்காருவை அதன் மண்ணிலேயே வீழ்த்தியது மூலம் அனைவரது பார்வையும் இந்தியா எளிதில் வெற்றி பெறும் என்பதிலேயே உள்ளது.

சைலண்ட் இங்கிலாந்து

சைலண்ட் இங்கிலாந்து

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் முதல் சாதாரண கிரிக்கெட் ரசிகர்கள் வரை இந்தியா, இங்கிலாந்தை எளிதில் சாய்த்து விடும் என்பதே ஒத்த கருத்தாக உள்ளது. ஆக போகஸ் முழுவதும் இந்தியா மீது இருக்க, மிகவும் சைலண்டாக எந்த வித ஆதரவும், எதிர்பார்ப்பும் இன்றி காண்கிறனர் இங்கிலாந்து அணியினர்.

மெத்தனம் கூடாது

மெத்தனம் கூடாது

சொந்த மண் என்பது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக இருந்தாலும், சைலண்டாக இருக்கும் இங்கிலாந்திடம் மெத்தனமாக இருந்து விட கூடாது என்றும் கருத்துக்கள் வருகின்றன. நம்மிடம் பும்ரா இருந்தால் அங்கு ஆர்ச்சர் இருக்கிறார். நாம் ஹார்திக் பாண்ட்யா வைத்திருந்தால் அங்கு மேட்ச் வின்னர் பென் ஸ்டோக்ஸ் இருக்கிறார். நடுவரிசையில் பலம் சேர்க்க இங்கிலாந்தின் முதுகெலும்பு கேப்டன் ஜோ ரூட் உள்ளார்.

ஆலிவ் போப் களம் காண்கிறார்

ஆலிவ் போப் களம் காண்கிறார்

இந்த நிலையில் நடுவரிசையில் பலம் சேர்க்க இங்கிலாந்தின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆலிவ் போப் காயத்தில் இருந்து குணமடைந்துள்ளது, ரூட்& கோவுக்கு கொஞ்சம் பலம் சேர்த்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது இடது தோள்பட்டையில் காயம் அடைந்தார் ஆலிவ் போப். தற்போது காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து இருக்கும் அவர் 2 நாட்களாக சக வீரர்களுடன் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் முதல் டெஸ்ட்டில் ஆலிவ் போப் களமிறங்குவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

Story first published: Friday, February 5, 2021, 8:26 [IST]
Other articles published on Feb 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+