Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே அணியை உடைக்கும் முயற்சியில் பிளேமிங்? பயிற்சியாளர் பதவியை விட்டு சென்றதால் ஆத்திரம்

மும்பை: ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான தனது கிட்டத்தட்ட 18 ஆண்டுகால உறவை முடிவுக்குக் கொண்டுவந்த பிறகு, இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான ஸ்டீபன் பிளெமிங், பணியில் சேர்ந்துள்ளார். இந்த சூழலில் தனது முன்னாள் அணியின் பேட்டிங் ஜாம்பவான் ஒருவரை தனது பயிற்சியாளர் குழுவில் சேர்க்க அணுகியுள்ளார்.

இதன் படி, இங்கிலாந்து அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க விருப்பமா என்று மைக்கேல் ஹசியிடம் பிளெமிங் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. ஹசி 2018 ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்து வருகிறார். இருப்பினும், அந்த அணியில் இருந்து விலகி இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிளெமிங், ஒரு சர்வதேச அணியுடன் இணைந்து பணியாற்ற அவரது விருப்பம் என்ன என்பதை அறிய ஹஸ்ஸியை அணுகியுள்ளார்.

Hussey

தற்போது, மார்கஸ் ட்ரெஸ்கோதிக் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் பேட்டிங் பயிற்சியாளராக உள்ளார். ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் போது அவர் அணியின் தற்காலிக தலைமைப் பயிற்சியாளராகச் செயல்பட உள்ளார். இருப்பினும், அவரது நீண்ட காலப் பணி தொடருமா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை.

தற்போது நடைபெற்று வரும் 'தி ஹண்ட்ரட்' ஆடவர் தொடரில் வெல்ஷ் ஃபயர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் ஹசி, முன்னதாக 2022 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையின் போது இங்கிலாந்து அணியின் ஆலோசகராகப் பணியாற்றி, அவர்கள் சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது பேசியிருந்த ஹசி, "முதல்முறையாக நான் இங்கிலாந்து அணியின் சீருடையை அணிந்தபோது சற்று விசித்திரமாக இருந்தது. ஆனால், அதன் பிறகு வீரர்களுடன் இணைந்து பணியாற்றும்போது, அந்த தனிப்பட்ட உறவுகளை வளர்த்துக்கொள்வதில் கவனம் செலுத்தி, நாம் எந்த நாட்டைச் சேர்ந்த சீருடையை அணிந்திருக்கிறோம் என்பதை மறந்துவிடுகிறோம்" என்று கூறியிருந்தார்.

சிஎஸ்கே அணியில் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் எரிக் சிமன்ஸ் உடனும் பிளெமிங் நெருக்கமாகப் பணியாற்றியுள்ளார். இதனால் சிமன்ஸ் பெயரும் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் குழுவில் இடம் பெறலாம் என்று பேசப்படுகிறது.இந்த செய்திகளை அறிந்த பிறகு, சிஎஸ்கே அணியை உடைக்கும் முயற்சியில் பிளமிங் ஈடுபடுகிறாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Story first published: Wednesday, August 5, 2026, 18:17 [IST]
Other articles published on Aug 5, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+