Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்.. இங்கிலாந்து அணி அறிவிப்பு.. இத்தனை அதிரடி வீரர்களா?

எட்ஜ்பாஸ்டன்: இந்தியாவுக்கு எதிரான 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் களமிறங்கும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியின் கேப்டன் மார்கன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், தற்போது ஜாஸ் பட்லர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால் புது கேப்டன் எப்படி செயல்பட போகிறார், இங்கிலாந்து அணி என்ன செய்ய போகிறது என்பது அரிய அனைவரும் ஆர்வமாக இருப்பதால், இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து டி20 அணி

இங்கிலாந்து டி20 அணி

முதல் டி20 போட்டி வரும் 7அம் தேதியும், 2வது டி20 போட்டி 9ஆம் தேதியும், கடைசி டி20 போட்டி 10ஆம் தேதியும் நடைபெறுகிறது. ஜாஸ் பட்லர் தலைமையிலான 14 பேர் கொண்ட அணியில் மொயின் அலி, அதிரடி வீரர் புருக், சாம் கரண், ரிச்சர்ட் கிளாசன், கிறிஸ் ஜார்டன், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மாலன், டைமல் மில்ஸ், மேத்தியூ பார்க்கின்சன், ஜேசன் ராய், சால்ட், டோப்லி, டேவிட் வில்லி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து ஒருநாள் அணி

இங்கிலாந்து ஒருநாள் அணி

இதே போன்று வரும் 12, 14 மற்றும் 17ஆம் தேதியில் நடைபெறும் ஒருநாள் தொடரில் ஜாஸ் பட்லர் தலைமையில் 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மொயின் அலி, பாரிஸ்டோ, ஹாரி புருக், பிரிடன் கார்ஸ், சாம் கரண், லியாம் லிவிங்ஸ்டோன், கிரைக் ஓவர்டன், மேத்திவ் பார்க்கின்சன், ஜோ ரூட், ஜேசன் ராய், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ் , டோப்லி, டேவிட் வில்லி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இடம்பெறாத வீரர்கள்

இடம்பெறாத வீரர்கள்

நட்சத்திர வீரர் டேவிட் மாலனுக்கு ஒருநாள் போட்டியில் வாய்ப்பு அளிக்கவில்லை. இதே போன்று பாரிஸ்டோக்கு டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ஆதில் ரஷித் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள உள்ளதால் அவருக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விடுமுறை வழங்கியுள்ளது.

இந்தியாவுக்கு சாதகம்

இந்தியாவுக்கு சாதகம்

இதே போன்று ஜோப்ரா, ஆண்டர்சன், வொக்ஸ், சாகிப் மகமுத் ஆகியோருக்கு இரு அணிகளிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இங்கிலாந்து அணியின் பேட்டிங் ப்லமாக இருந்தாலும், பந்துவீச்சில் அவ்வளவு அனுபவம் நிறைந்த வீரர்கள் இல்லை. இதனால் இந்தியாவுக்கு சாதகமாக கருதப்படுகிறது.

Story first published: Friday, July 1, 2022, 19:24 [IST]
Other articles published on Jul 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+