For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எக்ஸ்பிரஸ் வேகம்.. கல்லா கட்டுவதில் பிசிசிஐ-யை ஓவர்டேக் செய்து தூக்கி அடித்த அந்த டீம்!

மும்பை : கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், கிரிக்கெட் போட்டிகளை முதல் நாடாக துவக்கி வைத்தது இங்கிலாந்து.

Recommended Video

Ben Stokes sledged Blackwood in 1st test match

இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை அழைத்து தற்போது டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உயிர் பாதுகாப்பு சூழல் ஏற்படுத்தப்பட்டு இருப்பதால் அந்த டெஸ்ட் தொடர் சிக்கலின்றி நடந்து வருகிறது.

இந்தியாவில் நோ சான்ஸ்.. இந்த நாட்டில் தான் ஐபிஎல்.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. கசிந்த தகவல்!இந்தியாவில் நோ சான்ஸ்.. இந்த நாட்டில் தான் ஐபிஎல்.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. கசிந்த தகவல்!

மோசமான நிலை

மோசமான நிலை

இங்கிலாந்து அணி தன் நஷ்டத்தை ஈடு கட்ட மின்னல் வேகத்தில் செயல்பட்டு வரும் நிலையில், பிசிசிஐ ஐபிஎல் தொடரால் 5000 கோடி நஷ்டம் ஆகும் சிக்கலில் தவித்து வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு மோசமாகிக் கொண்டே தான் வருகிறது.

தடுமாறும் பிசிசிஐ

தடுமாறும் பிசிசிஐ

2020 ஐபிஎல் தொடரை நடத்த முடியாமல் பிசிசிஐ சிக்கித் தவித்து வருகிறது. அதை விட மோசமாக இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சி கூட அளிக்க முடியாத நிலை உள்ளது. ஆனாலும், அதிரடி முடிவுகள் எதுவும் எடுக்காமல் காத்துக் கொண்டு இருக்கிறது பிசிசிஐ.

இங்கிலாந்து என்ன செய்கிறது?

இங்கிலாந்து என்ன செய்கிறது?

மறுபுறம் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் இருந்தாலும் விளையாட்டுப் போட்டிகளை பாதுகாப்பாக நடத்த அனுமதி கிடைத்துள்ளது. அதை வைத்தே இங்கிலாந்து அணி வரிசையாக அடுத்த மூன்று - நான்கு மாதங்களுக்கு இடைவிடாமல் கிரிக்கெட் போட்டிகளை நடத்த உள்ளது.

மூன்று தொடர்கள்

மூன்று தொடர்கள்

தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் டெஸ்ட் தொடரில் ஆடி வரும் இங்கிலாந்து அணி அதன் பின் பாகிஸ்தான் அணியுடன் டெஸ்ட் தொடர் மற்றும் டி20 தொடரில் ஆட உள்ளது. அதன் பின் செப்டம்பரில் ஆஸ்திரேலிய அணியை ஒருநாள், டி20 தொடரில் ஆட அழைத்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து தொடர்

இந்தியா - இங்கிலாந்து தொடர்

அதே செப்டம்பர் மாதத்தில் இந்தியா - இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடர் இந்தியாவில் நடக்க இருந்தது. ஆனால், அதைப் பற்றி எல்லாம் கண்டு கொள்ளாத இங்கிலாந்து அணி அதிரடியாக காய் நகர்த்தி கல்லா கட்டி வருகிறது.

தானாக முடிவெடுத்த இங்கிலாந்து

தானாக முடிவெடுத்த இங்கிலாந்து

இந்தியாவை கலந்து ஆலோசிக்கும் முன்ப ஆஸ்திரேலிய அணியை அழைத்து விட்டது இங்கிலாந்து அணி. தற்போது இந்தியா - இங்கிலாந்து அணிகள் அந்த தொடரை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைப்பது பற்றி பேசி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

பிசிசிஐ மந்தம்

பிசிசிஐ மந்தம்

பிசிசிஐ-யும் வேகமாக செயல்பட நினைத்தாலும் இந்தியாவில் நிலவும் சூழலும், அரசின் ஒத்துழைப்பு விரைவில் கிடைக்காது என்பதாலும் மந்தமாக செயல்பட்டு வருகிறது பிசிசிஐ. அது மட்டுமின்றி முதலில் சிறிய தொடர்களை நடத்த முயற்சிக்காமல் ஐபிஎல் எனும் மெகா தொடரை நடத்த திட்டமிட்டு வருவதால் பெரும் சிக்கலில் உள்ளது.

அடுத்த திட்டம் என்ன?

அடுத்த திட்டம் என்ன?

அக்டோபர் மாதம் டி20 உலகக்கோப்பை நடக்காது என்ற முடிவில் இருக்கும் பிசிசிஐ அந்த காலகட்டத்தில் ஐபிஎல் தொடரை நடத்த முயற்சித்து வருகிறது. அதுவும் இந்தியாவில் தொடரை நடத்த முடியாது என்பதால் ஐக்கியா அரபு எமிரேட்ஸ்-இல் ஐபிஎல் தொடரை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

Story first published: Wednesday, July 15, 2020, 18:06 [IST]
Other articles published on Jul 15, 2020
English summary
England overtaking India and booking cricket series back to back. In the meantime, BCCI struggling to begin with IPL 2020.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X