மும்பை : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகும் வகையில் இங்கிலாந்து அணிக்கு ஒரு சூப்பர் நியூஸ் கிடைத்திருக்கிறது.
உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் பேட்டிங் மட்டுமில்லாமல் விக்கெட்டை எடுக்க கூடிய பந்துவீச்சாளர்கள் தேவை. அப்படி ஒரு பந்துவீச்சாளரை இங்கிலாந்து அணி காயம் காரணமாக பல நாட்களாக இழந்து இருந்தது.

இந்த நிலையில் இன்னும் இரண்டு மாதங்கள் உலகக்கோப்பை தொடருக்கு உள்ள நிலையில் காயத்தில் இருந்து மீண்டு இருக்கிறார் வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர். இங்கிலாந்து அணியின் பல போட்டிகளின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சு மட்டுமல்லாமல் முக்கிய கட்டத்தில் பேட்டிங்களிலும் சிறப்பாக செயல்பட கூடியவர். அப்படி இருக்க ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த ஆண்டு முழுவதும் காயம் காரணமாக விளையாடாமல் இருந்தார்.
பிறகு ஐபிஎல் போட்டிக்கு திரும்பியதும் மீண்டும் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் எந்த போட்டிகளிலும் பங்கேற்காமல் உடல் தகுதியை மீட்கும் முயற்சியில் மட்டும் அவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இங்கிலாந்து அணியும் ஜோப்ரா ஆர்ச்சர் என்ற ஒரு பந்துவீச்சாளர் இருந்ததையும் மறந்து மற்ற வீரர்களை தேடும் பணிக்கு சென்று விட்டார்கள்.
ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஆர்ச்சர் தற்போது தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார். 100% உடல் தகுதியை விரைவில் அவர் எட்டி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜோப்ரா ஆர்ச்சர் தனது பழைய பார்மை மீட்டு விட்டால் அவர் நிச்சயமாக உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம் பெறுவார். ஏனென்றால் ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் ஜோப்ரா ஆர்ச்சருக்கு அதிகம் இருக்கிறது.
மேலும் யாக்கர் பந்துகளை வீசி ரன்களை கட்டுப்படுத்துவதையும் வல்லவர். பேட்டிங் வரிசையில் எந்த இடத்தில் இறங்கினாலும் அதிரடியாக விளையாடக் கூடியவர். இதனால் ஐபிஎல் அனுபவம் நிச்சயம் ஜோப்ரா ஆர்ச்சருக்கு கைகொடுக்கும் என்பதால் அவரை இங்கிலாந்து அணியின் எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஜோப்ரா ஆர்ச்சர் வந்தால் அது நிச்சயம் இந்தியா,பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகளுக்கு கடினமான விஷயம்தான்.