Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிராப் போட்டு காட்டிய கோச்.. இந்தியாவை சரிக்க உதவிய வீடியோ.. செம திட்டத்தோடு வந்திருக்கும் இங்கிலாந்து

சென்னை: இந்தியாவின் டாப் ஆர்டர் வீரர்களை காலி செய்ய இங்கிலாந்து அணி பக்காவான திட்டத்தோடு களமிறங்கி உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி கடுமையாக திணற தொடங்கி உள்ளது. இங்கிலாந்து பவுலர்கள் இந்தியாவின் டாப் ஆர்டரை ஏற்கனவே சரித்துள்ளனர்.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 578 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் ரோஹித் 6, கோலி 11, கில் 29 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்துள்ளனர்.

எப்படி

எப்படி

இந்தியாவின் டாப் ஆர்டர் வீரர்களை காலி செய்ய இங்கிலாந்து அணி பக்காவான திட்டத்தோடு களமிறங்கி உள்ளது. இந்திய அணியின் தொடக்க சரிவை பார்த்து கிரிக்கெட் விமர்சகர்கள் பலர் இதை உறுதி செய்துள்ளனர். எந்த வீரருக்கு எந்த மாதிரியான பந்து வீக்கானது. எப்படி போட்டால் அவுட் ஆவார்கள் என்று பார்த்து பார்த்து பவுலிங் செய்கிறார்கள்.

பவுலிங்

பவுலிங்

ரோஹித் எப்படி போட்டால் அவுட் ஆகிறார், சுப்மான் கில்லின் வீக்னஸ் எது என்று என்று கடுமையாக திட்டங்களை வகுத்துள்ளனர். கோலி கடந்த ஒன்றரை வருடத்தில் எப்படி எல்லாம் அவுட் ஆனார். ரஹானே வீக்னஸ் என்ன, புஜாராவை உடனே காலி செய்வது எப்படி என்று திட்டம் வகுத்து உள்ளனர்.

பக்கா பிளான்

பக்கா பிளான்

சுப்மான் போன்ற வீரர்களின் முதல்தர போட்டிகளை பார்த்து அதற்கும் தகுந்தபடி பிளான் வகுத்து உள்ளனர். உதாரணமாக ஆஸ்திரேலியாவில் ரோஹித் சர்மா எப்படிப்பட்ட பந்துகளில் அவுட்டனரோ அதேபோல் இன்று ஆர்ச்சர் வீசினார். புல் லென்தில் ஸ்டம்பிற்கு மேல் இவர் வீசினார். இதில் திணறிய ரோஹித் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

கில்

கில்

கில்லும் இதேபோல் ஆர்ச்சர் பவுலிங்கில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதெல்லாம் போக கோலிக்கும் இதேபோல் ஸ்பின் பவுலிங்கில் குறி வைத்து அவுட் சைட் ஆப் ஸ்டம்பில் வீசி விக்கெட் எடுத்தனர். கோலி இதற்கு முன் பலமுறை இதேபோல் அவுட்டாகி உள்ளார்.

புஜாரா

புஜாரா

தற்போது புஜாராவிற்கு அவரின் வீக் பகுதியான புல் லென்த் பகுதியில் பந்து வீசி வருகிறார்கள். இதனால் அவரும் கவனமாக ஆட வேண்டும். பல விஷயங்களை ஆய்வு செய்து ஒவ்வொரு வீரருக்கும் ஒரு கிராப் வரைந்து திட்டம் போட்டு உள்ளனர். இதனால் இங்கிலாந்து அணி முறையான திட்டமிடலுடன் இறங்கி உள்ளது. இதுதான் இந்திய அணிக்கு எதிராக திரும்பி உள்ளது.

திட்டம்

திட்டம்

அதிலும் பெஸ், ஆர்ச்சர் ஆகியோரை இங்கிலாந்து அணி துருப்பு சீட்டாக பயன்படுத்தி வருகிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் இதற்கு முன் ஆடிய போட்டியின் வீடியோக்களை எல்லாம் ஆராய்ந்து பிளான் வகுத்துள்ளனர். கண்டிப்பாக இந்திய அணி கவனமாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Story first published: Sunday, February 7, 2021, 21:29 [IST]
Other articles published on Feb 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+