Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மோசம் செய்துவிட்டனர்.. நேராக ஐசிசியிடம் சென்ற இங்கிலாந்து.. திக் புகார்.. அடங்காத அகமதாபாத் சர்ச்சை!

அகமதாபாத்: இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் தற்போது அகமதாபாத் மைதானத்திற்கு எதிராக இங்கிலாந்து புகார் அளிக்க உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிரடியாக ஆடி வெற்றிபெற்றுள்ளது. வெறும் இரண்டு நாளில் மொத்த ஆட்டமும் முடிவிற்கு வந்து இருக்கிறது.

இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 49 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் விக்கெட் இழப்பின்றி இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டி முழுக்க ஸ்பின் பவுலர்கள்தான் ஆதிக்கம் செலுத்தினார்கள்.

விக்கெட்

விக்கெட்

இந்த போட்டியின் 4 இன்னிங்சில் மொத்தம் 30 விக்கெட் விழுந்தது. இதில் ஸ்பின் பவுலர்கள் மட்டும் 28 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். அக்சர் 11 விக்கெட், அஸ்வின் 7 விக்கெட், ரூட் 5 விக்கெட் என்று இந்த போட்டியில் ஸ்பின் பவுலர்கள்தான் ஆதிக்கம் செலுத்தினார்கள்.

 ஆதிக்கம்

ஆதிக்கம்

முழுக்க முழுக்க பிட்ச்தான் இதற்கு காரணமாக இருந்தது. அகமதாபாத் மைதானத்தின் பிட்ச் அப்படியே ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்றபடி மாற்றப்பட்டு இருக்கிறது. பிட்ச் முழுக்க உடைந்து மண் தெறிக்கும் வகையில் களிமண் கொண்டு இந்த பிட்ச் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

மோசம்

மோசம்

இங்கிலாந்து அணியின் தோல்விக்கு இந்த பிட்ச் முக்கிய காரணம் ஆகும். இதனால்தான் 5 போட்டிகள் நடக்க வேண்டிய டெஸ்ட் ஆட்டம் இரண்டு நாட்களில் முடிந்துள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து அணி இந்த பிட்ச் மீது புகார் வைத்துள்ளது. கிரிக்கெட் ஆடுவதற்கு மிகவும் மோசமான, கடினமான பிட்ச் இது என்று இங்கிலாந்து அணி கூறியுள்ளது.

கேப்டன்

கேப்டன்

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இதுகுறித்து கூறுகையில், இந்த பிட்ச் முழுக்க முழுக்க எங்களுக்கு எதிராக இருந்தது. ஐசிசிதான் இதில் முடிவு எடுக்க வேண்டும். இந்த விளையாட தகுதி உள்ள பிட்சா என்று ஐசிசிதான் முடிவு எடுக்க வேண்டும் . நாங்கள் முடிவு எடுக்க முடியாது என்று ரூட் கூறியுள்ளார்.

புகார்

புகார்

இந்த பிட்ச் குறித்து இங்கிலாந்து அணி ஐசிசியிடம் புகார் அளிக்க உள்ளதாக தெரிகிறது. பிட்ச் மோசமானதாக இருந்ததாக நிரூபிக்கப்பட்டால் இந்திய அணியின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் குறைக்கப்பட கூட வாய்ப்புகள் உள்ளது. ஆனால் பிசிசிஐ அமைப்பிற்கு எதிராக ஐசிசி அவ்வளவு கடுமையான முடிவுகளை எடுக்குமா என்பது சந்தேகம்தான்.

Story first published: Friday, February 26, 2021, 10:06 [IST]
Other articles published on Feb 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+